search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Modakurichi tomorrow"

    • மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
    • மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான இடத்தை மொட க்குறிச்சி தாசில்தார் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

    இந்நிலையில் மொட க்குறிச்சி தாசில்தார் நீதி மன்றம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் காலம் தாழ்த்தி வருவதாக பொது மக்கள் புகார் கூறினர். மேலும் மொடக்குறிச்சிக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக கூறி மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

    இந்நிலையில் மொடக் குறிச்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் கிராம கமிட்டி தலைவர் கொளந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். மொட க்குறிச்சியில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் இருந்தும் அதனை அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வரு கிறார்கள்.

    எனவே மொடக்குறிச்சி தாசில்தாரை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) மொடக்குறிச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. ேமலும் நாளை மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×