என் மலர்
நீங்கள் தேடியது "Daily cases of Corona"
- நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோ னா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகியுள்ளது.
- மாவட்டத்தில் 33 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோ னா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து விடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 820 ஆக இருந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்து ள்ளனர். மாவட்டத்தில் 33 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் செல்லும் போது மறக்காமல் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






