பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்வு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அணைக்கு வினாடிக்கு 2,422 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரிபள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com