என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின.
    • சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு்ள்ளது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் தரை தளத்தில் கசிவு நீர் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வாய்க்கால் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அதிக அளவில் வெளியேறிய வெள்ளநீரில் பாலப்பாளையம்,சின்னியம்பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், கூரபாளையம்,செங்கோடம்பாளையம் கிராமங்களில் உள்ள 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கின.

    மேலும் அந்த பகுதி சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு்ள்ளது. இந்நிலையில் பெருந்துறை அருகே உள்ள தனியார் துணி உற்பத்தி மில்லில் 30 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    • 1,130 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் ெரயில் மூலமாக ஈரோடு கொண்டு வரப்பட்டன
    • கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கிட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன

    ஈரோடு,

    தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு கிளைக்கு 500 மெட்ரிக் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். உர நிறுவனத்தின் மூலமாக 1,130 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் ெரயில் மூலமாக ஈரோடு கொண்டு வரப்பட்டன.

    இதில் ஈரோடு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட 980 மெட்ரிக் டன் உரங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு கிளைக்கு 500 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த உரங்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கிட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக இந்த உரங்களை பெற்று பயனடையலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு மண்டல மேலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது
    • விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது. இந்த விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மொடச்சூர் வார சந்தை பகுதியில் உள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியை வழிகாட்டு தலுக்கிணங்க பணப் பயன் ஏதுமின்றி நடத்துவதற்கு அரசு சார்பி ல்லா விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்ப லாம்.

    ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆணையர் என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விண்ணப் பிக்க வேண்டும்.

    தொண்டு நிறுவனங்கள் இது வரை ஈடுபட்டுள்ள முன் அனுபவ சேவை விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை நக ராட்சி மூலம் ஆய்வு செய்து தகுதியான தொண்டு நிறு வனங்களை தேர்வு செய்ய ப்படும்.

    மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் விடுதி ஒப்டைக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • ஒப்பந்த தொழி லாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
    • 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

    பெருந்துறை,

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 4 நாட்களாக ஊதிய உயர்வு, வேலை நேர மாற்றம் மற்றும் வார விடுமுறை, சம்பளம், போனஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி யில் உள்ள அவர்களது மேலாளர் தலைமை மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இதில் அவர்களு க்குள் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இதில் தொழிலாள ர்களின் வேலை நேரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக பணி யாளர்கள் வேலைக்கு வர முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறை அதிக மாக உள்ளதால் தேவையான ஊழியர்களை மீண்டும் நியமித்த பின்பு வார விடுமுறை விரைவில் அறி விக்கப்படும் என தெரிவிக்க ப்பட்டது.

    சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பாக வரும் 13-ந் தேதி சென்னை யில் மேலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    அதில் ஏற்படும் முடி வைக் கொண்டு மறு பரிசீலனை செய்யப்படும் என தொழிலாளர்கள் தெரி வித்தனர்.

    தற்போது 4 நாட்களாக நடைபெற்று வந்த தொழி லாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று காலை முதல் அனைத்து துப்புரவு தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர்.

    • 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு அருகே உள்ள சமுதாய கூட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஷ்கண்டா (32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) ஆகியோர் என தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    • பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.
    • இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மற்றும் மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில் போலீசார் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

    அவர் பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.

    இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து அங்கு சோதனை செய்தனர்.

    அதில் ஈரோட்டில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 1,900 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானி துருப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து, அவரிடம் இருந்த 1,900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொழிவு இன்றியும் நிலையற்றத் தன்மையுடன் இருந்து வருகிறது.

    இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.

    மேலும் தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,312 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இதுவரை 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 1, 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சாரல் மழையுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    மாண்டஸ் புயல் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சாரல் மழையுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. நேற்று மதியம் முதல் குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.

    இதன் காரணமாக ஊட்டி போல் ஈரோட்டிலும் பொதுமக்கள் பகல் நேரத்திலேயே சுவட்டர், குல்லா அணிந்து வந்து சென்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் மலைபிரதேசம் போல் மாறியது.

    ேமலும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல்மழையும் பெய்தது. இந்த நிலையில் இரவில் புயல் கரையை கடக்க தொடங்கியதும் காற்று அதிகளவில் வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையான குளிரில் நடுங்கினர்.

    வீடுகளின் சுவர், தரைதளம் ஆகியவை ஜில்லென இருந்தது. தாளவாடி, பர்கூர் மலை பகுதிகளில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை கடுமையான பனிப்பொழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    பனிப்பொழிவுடன் குளிரும் நிலவிவருவதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    இதனால் சாலைகள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது. மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் கடுங்குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் செல்போனை பறித்துகொண்டு மாயமாகி விட்டனர்.
    • போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்துள்ளது ஈங்கூர் குட்டப்பாளையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர பட்டேல் (21) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் இங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் இவரது செல்போனை திடீரென பறித்துக் கொண்டு மாயமாகி விட்டனர்.

    பின்னர் மகேந்திர பட்டேல் இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (24) என்பவரையும், திங்களூர் அருகில் உள்ள தாண்டாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.  

    • அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் ஒரு கடையில் டீ குடிக்க சென்றார்.

    இதையடுத்து அவர் கடை யில் டீ குடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்த னர். இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனால் திருடர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பல் சி.சி.டி.வி கேமிரா இல்லாத இடங்களில் நோட்டமிட்டு அந்த பகுதியில் வந்து பொது மக்கள் போல் வந்து வாகன ங்களை திருடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் போலீசாரிடம் சிக்காமல் உள்ள இந்த திருட்டு கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.

    இந்த பகுதிகளில் திருடப் படும் பெரும்பாலான வாக னங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும், இதனால் வாகனத்திருட்டில் ஈடுபடுபவர்கள் எந்தவித பயமும் இன்றி திருடிச் செல்கின்றார்கள் என மக்கள் புகார் கூறினர்.

    இதேபோல் அந்தியூர் முன்னாள் தாசில்தா–ரின் இரு சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்தி லேயே மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடிய வில்லை. தொடர்கதை யாகவே இந்த இருசக்கர வாகன திருட்டு நடந்து கொண்டு வருகிறது.

    எனவே அவர்களை பிடிக்க போலீசார் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் சந்தேக ப்படும்படி இருப்ப வர்களன் நடமாட்டத்தையும் வாகனத்தின் அருகே நிற்பவர்கள் யார்? எதற்காக அங்கு இருக்கிறீர்கள் என விசாரணை நடத்த வேண்டும்.

    மேலும் டீ கடைகளில் தேவையின்றி அமர்ந்தி ருக்கும் நபர்களை அமர வைக்க கூடாது. அதே போல் சந்தேகம்படும் நபர் களை கண்காணித்து போலீ சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளை ஊக்கப்படுத்த மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
    • சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிர் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே, அதிக லாபம் கிடைக்கும் இயற்கை விவசாயத்தில், தோட்டக்கலைப் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

    இவ்விருது பெற விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் ரூ. 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

    சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். மாவட்டக் குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலினை, வயலாய்வு செய்யப்பட்டு, மாநில குழுவுக்கு அனுப்பப்படும்.

    மாநிலத்தில் தேர்வாகும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2வது பரிசாக ரூ. 60 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 40 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படும்.

    விருது பெற, அந்தந்த பகுதி விவசாயிகள், தொடர்புடைய வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×