என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
    • ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது.
    • தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது. இங்கு தினமும், 3,000 முதல், 4,500 மூட்டை மஞ்சள் விற்பனையாகும்.

    நேற்றைய நிலையில் விரலி மஞ்சள் குவிண்டால், 5,429 ரூபாய் முதல், 8,150 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 4,746 ரூபாய் முதல், 7,159 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    தற்போதைய விலை நிலவரம் குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது. அதன்பின் தற்போது வரை விலை உயரவில்லை.

    தற்போது வரை மார்க்கெட்டுக்கு அதிகமாக பழைய மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வருவதால், விலையில் உயர்வு ஏற்படவில்லை. தற்போது, 80 முதல், 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 முதல், 30 சதவீதம் புதியவை வரத்தாகிறது.

    பழைய மஞ்சள், புதிய மஞ்சள் என தனித்தனியாக விற்பனை செய்ய இயலாது. கலந்து விற்பனையாவதால், விலையில் மாற்றம் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் புதிய மஞ்சள் வரத்து குறைந்த நிலையில், மஹராஷ்டிராவில் வரத்தாகும் புதிய மஞ்சளை நம்பி, ஈரோடு மார்க்கெட் செயல்படுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்த புதிய மஞ்சள் 90 சதவீதம் விற்பனை செய்துவிட்டனர். பழைய மஞ்சள் இருப்பில் உள்ளதால், அவற்றை விற்பனைக்கு அதிகமாக கொண்டு வருகின்றனர்.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில், 65 கிலோ எடை கொண்ட, 5 லட்சம் மூட்டை வரை பழைய மஞ்சள் உள்ளது.

    தவிர, ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுக்கு வேலுார், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இம்மஞ்சள் தமிழகத்துக்கு மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா, பீகார் போன்ற வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும். இதில், 80 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும். கடந்தாண்டும், நடப்பாண்டிலும் மழை அதிகமாக உள்ளதால், இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதனால், 10 முதல், 12 லட்சம் மூட்டை மஞ்சள் வரத்தாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் புதிய மஞ்சள் வரத்தாகும்போது விலை உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது கொடிவேரி அணை.இதே போல் சிறந்த பரிகார தலமாக உள்ளது பவானி கூடுதுறை.

    கொடிவேரி அணையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணையின் அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் பண்ணாரியம்மன் கோவிலுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.மேலும் திம்பம், தாளவாடி, பர்கூர் மலைபகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்கண்டு ரசித்தனர்.

    இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.

    இதேபோல் வெளியூர்களில் இருந்தும்ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும்,தர்ப்பணம் செய்தும் சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.

    • சூர்யா வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது தாய் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

    பின்னர் வீட்டில் அமைதியாக போய் தூங்கு என்று பெற்றோர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் உள்ளே சென்ற சூர்யா சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதனைப்பார்த்த உறவினர்கள் சூர்யாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார்.

    சம்பவம் குறித்து சூர்யாவின் தந்தை சாமிக்கண்ணு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 88 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டப்பட்ட நிலையில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 300 கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.
    • இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு:

    தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.

    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதன ங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் பகுதி, வ.உ.சி. மார்க்கெட் பகுதி, கடை வீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை ஏராளமான விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 10 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.50 முதல் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சி க்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

    பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

    பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கி ழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

    வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

    • விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
    • தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

    வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கரு விதைகளைக்கொண்டு கோவை தமிழ்நாடு வேளா ண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதைபெருக்கம், விவசாயிகளுக்கு சாகுபடி க்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணை களை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லிய மாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றனர்.

    இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல் - கோ 51 ரகம் வல்லுநர் நிலை விதை ப்பண்ணை அமைக்க ப்பட்டு விதைப்பயிர் பூப்பரு வத்தில் உள்ளது.

    இவ்விதைப்பண்ணையை பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம், விதைச்சான்று அலுவலர்கள் மாரிமுத்து, ராதா அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.

    ஆய்வின் போது விதை ப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்த றிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
    • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

    அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கடுக்காம் பாளையம் பகுதி அருகே சென்ற போது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    மருத்துவ நிட்புநர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வள்ளிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது.
    • சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மாதேஸ்வரி.‌ இவர்கள் பவானி காமாட்சி அம்மன் கோவில் ரோட்டில் ஜவுளிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்த கடைக்கு நேற்று 3 பெண்கள் வருகை தந்து 9 வயது குழந்தைக்கு துணி வேண்டும் எனக்கூறினர். பின்னர் மாதேஸ்வரி துணியை காண்பித்தார். அந்த பெண்கள் பல வகையான துணியை கலைத்து பார்த்தனர்.

    இந்நிலையில் 2 பெண்கள் வெளியில் இருந்து கொண்டு ஒருவர் உள்ளே துணியை பார்க்க சென்ற நிலையில் நாம் வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் எனக்கூறி 3 பேரும் மள மளவென கடையை விட்டு கிளம்பினர்.

    அப்போது மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.16,500 ஆகும். இதனையடுத்து அந்த 3 பெண்களில் ஒருவரை பிடித்து பவானி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் கோபி செட்டிபாளையம், கணக்கம் பாளையம், பழைய காலனி பாரதி வீதி பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை மனைவி சிவரஞ்சனி (34) என்பதும், சேலைகளை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓட்டம் பிடித்த கார்த்தி மனைவி அபிராமி, வேலுச்சாமி மனைவி தாமரை ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஜவுளிக்கடையில் துணி எடுப்பதாக கூறி உள்ளே புகுந்த 3 பெண்கள் 11 சேலைகளை திருடிய சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). இவர் அருகே உள்ள தட்டப்பள்ளி க்கு உணவு வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த வழியாக பவானிசாகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்பவர் அன்னூரில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டு இரு ந்தார். சரவணன் தட்ட ப்பள்ளி அருகே வந்தார். அப்போது சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார். இதில் அவர்கள் இருவரும் கீேழ விழுந்தனர்.

    இதில் சதீசுக்கு கால் உள் பட பல்வேறு இடங்களில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் சதீசை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு காலில் பலத்த அடிப்பட்ட தால் ஸ்கேன் எடுப்பதற்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் அங்கு செல்லாமல் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார்.

    இதையடுத்து அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை காலை வருமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதை க்யடுத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சதீஸ் வீட்டில் திடீரென இறந்து விட்டார். இது குறித்து போலீசாருக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×