வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

சூர்யா வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது தாய் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

பின்னர் வீட்டில் அமைதியாக போய் தூங்கு என்று பெற்றோர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் உள்ளே சென்ற சூர்யா சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

இதனைப்பார்த்த உறவினர்கள் சூர்யாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார்.

சம்பவம் குறித்து சூர்யாவின் தந்தை சாமிக்கண்ணு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com