பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
Published on

ஈரோடு:

தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தாளவாடி அடுத்த கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு அருகே உள்ள சமுதாய கூட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஷ்கண்டா (32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) ஆகியோர் என தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com