என் மலர்
நீங்கள் தேடியது "Civilians stuck in"
- ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சாரல் மழையுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
- கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரோடு:
மாண்டஸ் புயல் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சாரல் மழையுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. நேற்று மதியம் முதல் குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
இதன் காரணமாக ஊட்டி போல் ஈரோட்டிலும் பொதுமக்கள் பகல் நேரத்திலேயே சுவட்டர், குல்லா அணிந்து வந்து சென்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் மலைபிரதேசம் போல் மாறியது.
ேமலும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல்மழையும் பெய்தது. இந்த நிலையில் இரவில் புயல் கரையை கடக்க தொடங்கியதும் காற்று அதிகளவில் வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையான குளிரில் நடுங்கினர்.
வீடுகளின் சுவர், தரைதளம் ஆகியவை ஜில்லென இருந்தது. தாளவாடி, பர்கூர் மலை பகுதிகளில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை கடுமையான பனிப்பொழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
பனிப்பொழிவுடன் குளிரும் நிலவிவருவதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இதனால் சாலைகள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது. மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் கடுங்குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






