என் மலர்
நீங்கள் தேடியது "2 teenagers arrested for"
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் செல்போனை பறித்துகொண்டு மாயமாகி விட்டனர்.
- போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்துள்ளது ஈங்கூர் குட்டப்பாளையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர பட்டேல் (21) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் இங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் இவரது செல்போனை திடீரென பறித்துக் கொண்டு மாயமாகி விட்டனர்.
பின்னர் மகேந்திர பட்டேல் இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (24) என்பவரையும், திங்களூர் அருகில் உள்ள தாண்டாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






