என் மலர்
ஈரோடு
- மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை அருகே உள்ள சின்ன வடமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (23). எலக்ட்ரீசியன்.
சம்பவத்தன்று மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது யு.பி.எஸ்-ஐ ஒரு அறையில் இருந்து மற்றொரு அறையில் மாற்றி அதற்கான மின்சார வயர்களை இணைத்து கொண்டிருந்தார்.
அப்போது மெயின் பாக்ஸ் ஸ்விட்சை அணைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மயில்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் கதிரம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் துளசியம்மாள் (68). இவரது மகன் திருநாவுக்கரசு நசியனூர் கலவை ஓரம் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
துளசியம்மாள் தினமும் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு பின்னர் இரவில் கதிரம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூங்க சென்று விடுவார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக துளசியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தனது வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.
காலை திருநாவுக்கரசு தனது தாயை பார்ப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் உடல்நிலை குறைவால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது.
- பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
104.50 அடிக்கு மேல் சென்றால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு அப்படியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை நேற்று இரவு கடந்தது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28-வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,549 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு உபரிநீராக 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவானி ஆற்றல் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.
- வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கள் வரத்தும் குறைந்து வருகின்றன.
இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.
இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து மட்டும் 1,500 பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று கிடுகிடுவென உயர்ந்து ரூ.25-க்கு விற்கப்படுகிறது.
- பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர்.
- வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.
பவானி:
பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவர் பவானி அருகில் உள்ள சேர்வ ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் மோட்டார் சைக்கி ளை அவரது தங்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.
பிறகு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீ சார் அவரை நிறுத்தி விசா ரணை நடத்தினர்.
இதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த வாலி பரை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஈரோடு பி.பி. அக்ரகாரம் பூம்புகார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பது தெரிய வந்தது.
மேலும் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் பவானி, சேர்வராயன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கொடுமுடி வட்டாரத்திற்கு சந்தனமரம் 2,150, செம்மரம் 6,400 , ரோஸ்வுட் 1,800, மகாகனி 4,800, பெருநெல்லி 1,600, கடம்பு 100, கடுக்காய் 100, வேங்கை 100, நாவல் 300, மருதம் 100, தான்றிக்காய் 100, இலுப்பை 100, புளியமரம் 200, இலவங்கம் 100, வாகை 150, புங்கம் 500, வில்வம் 100, விளாமரம் 100, எட்டி மரம் 100, தூபமரம் 100 என மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மரக்கன்று களை இலவசமாக பெறுவதற்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரைஅணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். கொடுமுடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, பரிந்துரை படிவம் பெற்ற பின் அலுவலகத்தில் அறிவிக்கப்படும் நாற்றங்காலில் நேரடியாக சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தெரிவித்துள்ளார்.
- தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.
- சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.
முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாத சிவா ச்சாரியார் தலைமையில் ஸ்தானீகம் ராஜசேகர் குரு க்கள், சின்னசாமி குருக்கள், ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க தலைவர் மதி குருக்கள் தலைமையில் கோபூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசகம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி முருகப்பெருமானின் வேலு க்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தைப்பூச திருத்தேரு க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதை தொடர்ந்து திருவிழா குறித்த தகவல் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதன் பின்பு தைப்பூச திருத் தேரோட்டத்தில் ஈடுபட கூடிய தேர் வேலை செய்யும் பணியாளர்கள், வாத்திய குழுவினர், அர்ச்ச கர்கள், ஒதுவார் மூர்த்தி, மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தலைமை குருக்கள் தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரளி மஞ்சள் ஆகிய பொருட்களை பிரசாத மாக வழங்கினார்.
இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கடம்பூர் போலீசார் மொசல்மடுவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதி விவசாயி ஆண்டிசாமி கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிடப்பட்டு ள்ளதாகவும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் கடம்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடம்பூர் போலீசார் மொசல்மடுவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாயி ஆண்டிசாமி (50) என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டு ள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அதே பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மண்பானை மற்றும் பாத்திரங்களில் 60 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்த னர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்டிசாமி சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்டதும், சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 60 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் மரவள்ளி செடிகளுக்கு இடையே பயிரிடப்பட்ட 120 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ஆண்டிசாமியை கைது செய்து கடம்பூர் போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
- மரங்கள் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.
சென்னிமலை:
சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் 18 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
தற்போது இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்துள்ளதால் அதன் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.
இதனால் அங்கன்வாடி கட்டிடத்தின் சமையலறை மற்றும் பொருட்கள் வைக்கும் அறையின் மேல் பகுதி முற்றிலும் சிதைந்து விட்டதால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிந்து அறைகளில் தேங்கி நிற்கிறது.
மேலும் கட்டிடத்தின் மேல் பகுதிகளில் அதிக அளவில் வெடிப்பு காணப்படுவதால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு சமையல் செய்யாமல் வகுப்பறை உள்ள இடத்தில் சமையல் செய்யப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் வகுப்பறை மற்றும் அங்கன்வாடியை சுற்றி மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து விடுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கின்றனர்.
மழை காலங்களில் அங்கன்வாடிக்குள் தண்ணீர் தேங்குவதால் குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் நிலை உருவாகிறது.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
- காரில் இருந்த பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப் பிடித்து எரிந்தது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் ரோடு கிரேநகர் ரங்க காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த வர் மணி (வயது 55).
இவரது வீட்டின் அருகே உள்ள செட்டில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். மேலும் அந்த செட்டில் பழைய சாமான்களும் போட்டு வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு காரில் இருந்த பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப் பிடித்து எரிந்தது. தீ மேலும் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய சாமான்களை மீது பரவியது.
இதை கண்டு அதிர்ச்சி அைடந்த மணி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இது குறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் நிலைய அலுவலர் நவீந்தி ரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணை த்தனர்.
- பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நரசாபரம் பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கே அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (62) என்பவரது சாலை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் பாலிதீன் கவரில் 100-கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் விசாரணையில் ராமசாமி கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், தனது பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
- குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த 2 வாரங்களாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஜவுளி வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. வெளிமாநில ஆர்டர்கள் ஓரளவு கை கொடுத்தது. இந்தநிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை.
குறிப்பாக வெளிமாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. சில்லரை விற்பனை மட்டுமே ஓரளவு நடைபெற்றது.
குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது. இதேநிலையில் மழை நீடித்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






