search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "V.U.C. The price of"

    • தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.
    • வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கள் வரத்தும் குறைந்து வருகின்றன.

    இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் உயர்ந்து விட்டது.

    இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து மட்டும் 1,500 பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று கிடுகிடுவென உயர்ந்து ரூ.25-க்கு விற்கப்படுகிறது. 

    ×