என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
    • பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்பட்டு சென்றார்.

    சத்தியமங்கலம்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் சேலம் புறப்பட்டு சென்றார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஸ்ரீநிதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஸ்ரீநிதி (16), மிருதுளா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீநிதி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி ஸ்ரீநிதி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது முருகன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோரை பார்க்க சென்று விட்டார். அவரது மனைவி மாவு அரைக்க கடைக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஸ்ரீநிதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் மாணவி ஸ்ரீநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து ஸ்ரீநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சித்தோடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டி பாளையம் பழைய பாலம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சோலார் ஈ.பி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆவார்.

    இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. பாலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு 4 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் மலையம் பாளையத்தை அடுத்த கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்க செய்தார்.

    அப்போது அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் விழுந்தது. பொருட்களும் சிதறி கிடந்தன.

    சம்பவ இடத்துக்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று 2-வது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருேக கீழ் பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
    • தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெருந்துறை:

    பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி மாலை பெருந்துறை அருேக கீழ் பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாய்க்காலில் இருந்து வெளியேறிய அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுஇருந்த நெல்,வாழை,கரும்பு, மஞ்சள் தோட்டத்தை சூழ்ந்தது.

    இதையடுத்து பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. ேமலும் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்து தண்ணீர் பல்வேறு கிளை வாய்க்காலுக்கும் திறக்கப்பட்டது.

    தற்போது வாய்க்காலில் தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்த பணிகளை தீவிரமாக முடிந்து தண்ணீர் திறக்கவேண்டு என்று விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ். செல்லும் வழியில் உள்ளது சின்னக்குளம்.

    இந்த குளக்கரையின் ஏரியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் கடந்த சில நாட்களாக பால் வடிந்து வந்தது.

    இதனால் வெள்ளோடு மற்றும் சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு சென்று அந்த வேப்ப மரத்திற்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறும் போது,

    கடந்த வாரம் வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவி லில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.

    இந்த மரத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு வரு கிறார்கள் என்றனர்.

    • சம்பவத்தன்று சென்னியப்பன் வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அலிங்கியம், அர்ஜுன காலனி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (48).

    இவர் சம்பவத்தன்று வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னியப்பன் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 34 ரூபாய் 34 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 72 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    • கலைத் திருவிழா போட்டியில் பர்கூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    அந்தியூர்:

    பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கலை திருவிழா நடைபெற்று வருகிறது.

    மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி யில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றி யம் பர்கூர் அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளி 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தெருக்கூத்து போட்டியில் பங்கேற்று மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களை தலைமை ஆசிரி யர் சுப்ரமணி, உதவி தலை மை ஆசிரியர் ராணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன், துணை திட்ட அலுவலர் மெய்வேலு மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் தங்களுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ராஜேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பள்ளி குழந்தைகள் கழிவு நீரை மிதித்து கொண்டு பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது.
    • இதனால் நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 405 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் இதுவரை தூய்மை பணியாளர்கள் இல்லாததால் ஆசிரியர்களே பள்ளியை சுத்தமாக வைத்திட ஒரு பெண்ணை நியமித்து 4 ஆண்டுகளாக சம்பளம் கொடுத்து வருகின்றனர்.

    பள்ளிக்கு தூய்மை பணியாளரை நியமித்து தருமாறும் மற்றும் பள்ளி அருகில் உள்ள தனியார் வணிக வளாகம் கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளி சுற்று சுவற்றை ஒட்டி வந்து பள்ளி வளாகத்தின் கேட்டின் முன்பு தேங்கி நிற்கிறது.

    மழைக்காலத்தில் கழிவு நீர் அதிகமாகவே இருக்கும். இதனால் பள்ளி குழந்தைகள் கழிவு நீரை மிதித்து கொண்டு பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது.

    பள்ளியில் கொசுக்கள் மிக அதிகமாக உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    இதனால் வாரத்திற்கு 2 முறை கொசு மருந்து தெளித்து சுகாதாரக்கேடு வராமல் தடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் தலைமை ஆசிரியர் முத்து நகராட்சி ஆணையாளர் சையது உசேனிடம் புகார் மனு அளித்தார்.

    மனுவை பெற்று கொண்ட ஆணையாளர் தனியார் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் முகேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஒலகடம் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (32). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் உள்ள ஒரு கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் வேலை முடிந்து இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் ஒலகடம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அவர் மயிலம்பாடியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோடு சடையக் கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.

    இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    டி.என்.பாளையம்:

    தென்காசி சங்கரன் கோவில் கூடிய குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி கணேசன் (35).

    இவர் கோவை பீளமேடு பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் கழிவு ஆயில் (பர்னஸ் ஆயில்) ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு என்ற பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு செல்ல அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு என்ற பகுதிக்கு இரவு வந்தார்.

    அப்போது சாலையின் இடது புற ஓரத்தில் டேங்கர் லாரியை நிறுத்த மண் தரையில் இறக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    • மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ,மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அவல்பூந்துறை தொடக்க பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் செயல்படும் மாதிரி வகுப்புகளை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    கொரோனா தொற்றின்போது 19 மாதம் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் செயல்படாமல் இருந்தது.

    இதனால் மாணவர்களிடம் கற்றலில் இடைவெளி ஏற்பட்டதை குறைக்க 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1-ம் முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் உரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை.

    இதற்கான பயிற்சி நூல் வழியாகவும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கையேடு மூலமும் பாட வாரியாக பயிற்சி வழங்கப்படுகிறது.

    குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டு, புதிர்கள், கலைகள், கைவினை பொருட்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

    இதேபோன்ற பயிற்சி வரும் 2025 வரை வழங்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் பிழையின்றி படிக்க, எழுத, செயல்பட எழுத்தறிவு, எண்ணறிவு பெறுவர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள், மாதிரி பள்ளிகள், கே.ஜி.பி.வி. பள்ளிகள் என 1,189 பள்ளிகளை சேர்ந்த 37,718 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்பறையில் கணினியில் பயில அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கூடுதல் செயல்பாட்டை பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அவல்பூந்துறை பஞ்சாயத்து தலைவர் சித்ரா, தாசில்தார் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் ரமேஷ், பி.டி.ஓ.க்கள் சக்திவேல், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    ×