என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Primary School"

    • பள்ளி குழந்தைகள் கழிவு நீரை மிதித்து கொண்டு பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது.
    • இதனால் நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 405 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் இதுவரை தூய்மை பணியாளர்கள் இல்லாததால் ஆசிரியர்களே பள்ளியை சுத்தமாக வைத்திட ஒரு பெண்ணை நியமித்து 4 ஆண்டுகளாக சம்பளம் கொடுத்து வருகின்றனர்.

    பள்ளிக்கு தூய்மை பணியாளரை நியமித்து தருமாறும் மற்றும் பள்ளி அருகில் உள்ள தனியார் வணிக வளாகம் கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளி சுற்று சுவற்றை ஒட்டி வந்து பள்ளி வளாகத்தின் கேட்டின் முன்பு தேங்கி நிற்கிறது.

    மழைக்காலத்தில் கழிவு நீர் அதிகமாகவே இருக்கும். இதனால் பள்ளி குழந்தைகள் கழிவு நீரை மிதித்து கொண்டு பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது.

    பள்ளியில் கொசுக்கள் மிக அதிகமாக உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    இதனால் வாரத்திற்கு 2 முறை கொசு மருந்து தெளித்து சுகாதாரக்கேடு வராமல் தடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் தலைமை ஆசிரியர் முத்து நகராட்சி ஆணையாளர் சையது உசேனிடம் புகார் மனு அளித்தார்.

    மனுவை பெற்று கொண்ட ஆணையாளர் தனியார் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×