வெப்பிலி விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
வெப்பிலி விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 34 ரூபாய் 34 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 72 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 1,801 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 71 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com