என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட"
- பெருந்துறை அருேக கீழ் பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
- தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெருந்துறை:
பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி மாலை பெருந்துறை அருேக கீழ் பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வாய்க்காலில் இருந்து வெளியேறிய அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுஇருந்த நெல்,வாழை,கரும்பு, மஞ்சள் தோட்டத்தை சூழ்ந்தது.
இதையடுத்து பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. ேமலும் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்து தண்ணீர் பல்வேறு கிளை வாய்க்காலுக்கும் திறக்கப்பட்டது.
தற்போது வாய்க்காலில் தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த பணிகளை தீவிரமாக முடிந்து தண்ணீர் திறக்கவேண்டு என்று விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






