என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The car-motorcycle"

    • காரில் இருந்த பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப் பிடித்து எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் ரோடு கிரேநகர் ரங்க காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த வர் மணி (வயது 55).

    இவரது வீட்டின் அருகே உள்ள செட்டில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். மேலும் அந்த செட்டில் பழைய சாமான்களும் போட்டு வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு காரில் இருந்த பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப் பிடித்து எரிந்தது. தீ மேலும் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய சாமான்களை மீது பரவியது.

    இதை கண்டு அதிர்ச்சி அைடந்த மணி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இது குறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    அதன் பேரில் நிலைய அலுவலர் நவீந்தி ரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணை த்தனர்.

    ×