search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state of collapse"

    • சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
    • மரங்கள் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பார்க் ரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் 18 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    தற்போது இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் முளைத்துள்ளதால் அதன் வேர்கள் கட்டிடத்தில் உள்பகுதியில் படர்ந்து கட்டிடம் பழுதடைந்து விட்டது.

    இதனால் அங்கன்வாடி கட்டிடத்தின் சமையலறை மற்றும் பொருட்கள் வைக்கும் அறையின் மேல் பகுதி முற்றிலும் சிதைந்து விட்டதால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிந்து அறைகளில் தேங்கி நிற்கிறது.

    மேலும் கட்டிடத்தின் மேல் பகுதிகளில் அதிக அளவில் வெடிப்பு காணப்படுவதால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு சமையல் செய்யாமல் வகுப்பறை உள்ள இடத்தில் சமையல் செய்யப்பட்டு வருகிறது.

    மழைக்காலங்களில் வகுப்பறை மற்றும் அங்கன்வாடியை சுற்றி மழைநீர் தேங்குவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து விடுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கின்றனர்.

    மழை காலங்களில் அங்கன்வாடிக்குள் தண்ணீர் தேங்குவதால் குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் நிலை உருவாகிறது.

    எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

    ×