என் மலர்
ஈரோடு
- சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரு க்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சுப்பிரமணி யத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் சுப்பிர மணியம் தொடர்ந்து மது அருந்தி வந்தார்.
இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்து உள்ளார். ஆனால், நோய் குணமாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டின் முன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்ட அவரது மகன் நாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
- பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வட மாநில வியாபாரியிடம் ரூ.1.17 லட்சம், நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.37 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரளா ஜவுளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம், ஆந்திரா வியாபாரிடம் ரூ.1 லட்சத்து 200 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில் சோதனை சாவடி அமைத்து, தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரசாத் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ரூ.1 லட்சத்து 3,800 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர் சூரம்பட்டியில் உள்ள சோப் நிறுவனத்துக்கு சோடா பவுடர் வாங்க பணத்துடன் வந்ததாக தெரிவித்தார். இருப்பினும் அத்தொகைக்கு உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் நசியனுார் கன்னவேலம்பா ளையத்தை சேர்ந்த மீன் குத்தகைதாரர் நல்லசிவம் (44) காஞ்சிகோவில் அருகே செல்லப்ப கவுண்டன்வலசை சேர்ந்த கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர் பூபதி (27) ஆகியோர் காரில் வந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது ரூ.87,500 ரொக்க பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோட்டில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அப்பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை மாலை நடக்கிறது.
- கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த 1 வாரமாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை (1-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார். மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்கிறார். எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், 3-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்வது குறித்தும், தலைவர்கள் பிரசாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.
முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.
- முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
- முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தேர்தல் மன்னன் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (65) என்பவர் 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர் ஆகும். டயர் பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். பின்னர் நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- அரசியல் கட்சியினரின் வேட்டி, சேலைகளை அணிந்து கட்சி உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகிப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கட்சிக் கொடிகளையும் அகற்றி வருகின்றனர்.
மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர், அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் கட்சியினர் முகாமிட்டு தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஈரோடு மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு போன்ற கடை வீதிகளில் தேர்தலையொட்டி தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரின் கட்சிக் கொடிகள், சின்னங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் கெடுபிடியால் அரசியல் கட்சி கொடிகள் சின்னங்கள் விற்பனை மந்த நிலையில் உள்ளது. அனுமதியின்றி வாகனங்களில் கட்டி வரப்படும் அரசியல் கட்சியினரின் கொடிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
அதே நேரம் அரசியல் கட்சியினர்களின் வேட்டி, சேலைகள், துண்டுகள் விற்பனை ஓரளவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் துண்டுகள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் அரசியல் கட்சியினர் வேட்டிகள் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலைகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினரின் வேட்டி, சேலைகளை அணிந்து கட்சி உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- கட்சி பிரமுகர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
கட்சி பிரமுகர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
- முதலமைச்சரும் பிரதமரும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என சீமான் விமர்சனம்
- ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு போனாலும் மக்கள் பிரச்சனைகளை பேசமாட்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். 90 வேண்டாம், 9 சதவீதம் நிறைவேற்றியதை சொல்லுங்கள் பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. அதேபோல் 10 வருடம் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள பிரதமர் மோடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஏன்? கேள்வி கேட்பார்கள்... அவர்களிடம் பதில் இல்லை. நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அப்போது நாம் அவர்களிடம் திருப்பி கேள்வி கேட்போம். அவர்களிடம் பதில் இல்லை.
தம்பி திருமகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமகன் முதலில் நமது கட்சியில்தான் இணைவதற்கு வந்தார். பின்னர் அவரது தந்தை என்ன சொன்னார் என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டான். நான் அங்கேயே இருந்துவிடு என்று கூறினேன். ஒன்றரை ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்தார் திருமகன். எதாவது மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசியதை பார்த்ததுண்டா? அய்யா (இளங்கோவன்) போனாலும் பேசமாட்டார். எனவே மக்களின் பிரச்சனைகளை துணிந்து தெளிந்து பேசக்கூடிய ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.
- ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது.
தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு தி.மு.க.வுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. திருமகன் ஒன்றை ஆண்டு காலத்தில் இறந்து விட்டார். பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.
எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா. எனவே திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.
ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பாக செங்கோட்டையன் எம் எல் ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மாநகராட்சி வளரும் என்று.
நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறுதினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு பதிவை கண்காணிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பணிக்காக 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்கு சாவடி மையத்திற்கு 4 பேர் வீதம் 238 வாக்குசாவடிக்கும் 952 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர கூடுதலாக 10 சதவீதம் பேர் என மொத்தம் 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 6-ந் தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அன்று எவ்வாறு செயல்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை கையாளும் விதம், அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வழிமுறை உள்பட பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் பவானி கல்வி மாவட்ட த்துக்கு உட்பட்ட கவுந்த ப்பாடி அடுத்த பொம்மன் பட்டி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பொம்மன்பட்டி, சின்னா கவுண்டனூர், தென்காசி பாளையம், வடகாடு பாளை யம், அய்யம்பாளையம் பாப்பங்காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 70 மாணவி கள் என சுமார் 134 மாணவ மாணவிகள் படித்து வரு கிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று காலை பொம்மன்பட்டி பள்ளி முன்பு திரண்டனர்.
இதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் பொது மக்கள் பள்ளி முன்பு அமர்ந்து பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த தும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்க ளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, காஞ்சிக்கோயில், சிவகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனை–யில் ஈடுபட்டிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 27 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவிரி ரோட்டில் உள்ள எடை நிலையம் ஒன்றின் அருகில் இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார்.
போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.
இதேபோல, வண்டியூரான் கோவில் பகுதியிலும் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் (22) என்பவரும் மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.






