என் மலர்
உள்ளூர் செய்திகள்

6-ந் தேதி முதல்கட்ட பயிற்சி தேர்தல் பணிக்கு 1300 ஆசிரியர்கள் தேர்வு
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு பதிவை கண்காணிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பணிக்காக 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாக்கு சாவடி மையத்திற்கு 4 பேர் வீதம் 238 வாக்குசாவடிக்கும் 952 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர கூடுதலாக 10 சதவீதம் பேர் என மொத்தம் 1300 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 6-ந் தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அன்று எவ்வாறு செயல்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை கையாளும் விதம், அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வழிமுறை உள்பட பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






