என் மலர்
ஈரோடு
- துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி (48). இவர் தனது தாயார் துளசி மணி மற்றும் இளைய மகள் சரண்யா பிரபா ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு துளசி மணி வீட்டுக்கு முன்பு இருந்த காலி இடத்தில் பழைய துணிகளை போட்டு தீ வைத்து எரித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தியும் அவரது மகளும் வெளியே வந்து பார்த்தனர்.
துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அருகில் கிடந்த சாக்குப் பையை எடுத்து தீயை அணைத்த னர். இருப்பினும் துளசி மணியின் தலையைத் தவிர உடல் முழுவதும் தீக்கா யங்கள் ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவர்கள் ஒரு ஆட்டோவை வரவழைத்து அங்கிருந்த வர்கள் உதவியுடன் பெருந்துறை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி மணி பரிதாபமாக இறந்து போனார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
- மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர்.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவில் பின் பகுதி யில் உள்ள இரட்டை விநா யகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என்றும், சிறந்த பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடை பெற்று வருகிறது. இதனால் இங்கு பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொது மக்கள் வருகிறார்கள். இதே போல் கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
மேலும் கூடுதுறையில் அமாவாசை, பவுர்ணமி, ஆடி பெருக்கு, ஆடி 18 மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட அதி களவில் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை யொட்டி ஈரோடு, பவானி, அந்தியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலல் இருந்தும் சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கூடுதுறைக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் நீராடி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்த னர். மேலும் எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகாரங்கள் செய்தனர். மேலும் பல பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கூடுதுறையில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதே போல் மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் திருமணமாகாத இளம் பெண்கள், வாலிப ர்களும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர்.
- ஆன்லைன் மூலம் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜை கைது செய்தனர்.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்சீதா(25). இவர் கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டி கொச்சி வேலி-ஷம் சர்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.
அந்த ரெயில் ஈரோடு வழியாக சென்றபோது ஹர் சீதாவின் லேப்டாப், ஸ்மார்ட் செல்போன், விலை உயர்ந்த கை கடிகாரம், செல்போன் சார்ஜர் என ரூ.1.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஆன்லைன் மூலம் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட போலீசார் காளைமாடு சிலை அருகே பழைய ரெயில்வே காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் கொங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஜெயராஜ் (33) என்பதும் ஹர்சீதாவின் விலை உயர்ந்த லேப்டாப், கைக்கடிகாரம், ஸ்மார்ட் செல்போன், செல்போன் சார்ஜர் போன்ற பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- சீமான் இன்று மாலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
- அண்ணாமலை வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் ஈரோட்டில் முகாமிட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 2 நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். முதல் நாளான நேற்று மாலை பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியிலும், வீதிவீதியாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக அண்ணாமலை பிரசாரத்தை தொடங்குகிறார். வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஓங்காளியம்மன் கோவில் மற்றும் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கடந்த 13, 14, 15 ஆகிய நாட்களில் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை சீமான் தொடங்குகிறார்.
இன்று மாலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து குமலன் குட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை கொல்லம்பாளையம் பகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் . 22-ந் தேதி வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம், 23-ந்தேதி கருங்கல்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் இறுதிகட்ட பிரசாரம் செய்கிறார்.
இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். அதனைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்று மாலையும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதனைத் தொடர்ந்து வரும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
- பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
- துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு குழுவில் 80 பேர் வீதம் 400-க்கும் மேற்பட்டவர்கள் வந்து விட்டனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 160 பேரும் வந்தனர்.
துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி மிக முக்கிய சோதனை சாவடி ஆக உள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், சென்னை போன்ற ஊர்களுக்கும் அந்த ஊரில் இருந்து ஈரோடு வருவதற்கும் இந்த சோதனை சாவடி முக்கிய பகுதியாக உள்ளது.
இதனால் இங்கு பறக்கும் படையினர், போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். கார்கள், லாரிகளை நிறுத்தி சோதனை செய்து வந்த நிலையில் நேற்று முதல் பஸ்களில் வரும் பயணிகளையும் சோதனை செய்ய தொடங்கியுள்ளனர். சோதனை சாவடி வழியாக செல்லும் பஸ்களை நிறுத்தி பஸ்களுக்குள் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினர், மற்றும் போலீசார் சென்று ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்கின்றனர். அதன் பிறகே பஸ் ஈரோடு நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இதே போல் ஈரோடு மாநகர பகுதியில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் துணை ராணுவத்தினர் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.
- சக்தி சுகர்சில் இருந்து கிளம்பும் உதயநிதி ஸ்டாலின் குமலன்குட்டை, முருகேசன் நகர் வழியாக வந்து கணபதி நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை அரசு ஆஸ்பத்திரி அருகே 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். சக்தி சுகர்சில் இருந்து கிளம்பும் உதயநிதி ஸ்டாலின் குமலன்குட்டை, முருகேசன் நகர் வழியாக வந்து கணபதி நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து நாராயணவலசு அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் இடையன் காட்டுவலசு, பிரபா தியேட்டர் வழியாக முனிசிபல் காலனி கருணாநிதி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அங்கிருந்து மேட்டூர் ரோடு, அகில்மேடு வீதி, நேரு வீதி வழியாக பழனிமலை வீதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் பிருந்தா வீதி ஈஸ்வரன் கோவில் வீதி மணிக்கூண்டு, மெட்ராஸ் ஹோட்டல், கந்தசாமி வீதி, காவிரி ரோடு, மஞ்சள் மார்க்கெட், வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, பழைய ரெஜிஸ்டர் ஆபீஸ் ரோடு போன்ற பகுதிகளில் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து கமலா நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் 50 அடி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியிலும், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதி, அக்ரஹாரம் பகுதி, காந்திநகர் பகுதி பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து முதல் நாள் பிரசாரத்தை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை அரசு ஆஸ்பத்திரி அருகே 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு எஸ்.கே.சி.ரோடு கிராம்படை வழியாக மணல்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். ஆலமரத்து தெரு, மரப்பாலம் மண்டபம் வீதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அய்யனார் கோவில் வீதியிலும், இந்திரா நகர் பகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் மத்தியில் பேசி பிரசாரத்தை நிறைவு செய்கிறார். 2 நாட்களில் உதய நிதிஸ்டாலின் 15 இடங்களில் இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார்.
பிரசாரத்திற்காக ஈரோடுக்கு வரும் அமைச்சர் உதயநிதியை வரவேற்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
- வாக்குப்பதிவு 27-ந்தேதிநடக்கிறது.
- பிரசாரம் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
ஈரோடு :
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இதுதவிர தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் 73 பேர் இந்த போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் 21 மாத கால ஆட்சிக்கு மக்கள் மதிப்பெண் அளிக்கும் தேர்தலாக இது உள்ளது. எனவே கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த தேர்தல் களத்தை தீவிரமாக கண்காணித்து வருவதுடன், அமைச்சர் துரைமுருகனை ஈரோடு களத்துக்கு நேரில் அனுப்பி, பணிகளை செம்மைப்படுத்தி உள்ளார்.
தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். அவருக்கு உறுதுணையாக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இதுபோல் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை முழுமையாக ஒருங்கிணைத்து வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தல். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாமல் அ.தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி மிக மிக முக்கியமானதாக உள்ளது.
எனவே, தேர்தல் அறிவித்த நாள் முதல் ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். மூத்த நிர்வாகிகள் பலரும் ஈரோட்டில் முற்றுகையிட்டு ஓட்டுகள் கேட்டு வருகிறார்கள்.
தே.மு.தி.க. சார்பில் மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள். கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளார்.
அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் தொடர் பிரசாரம் செய்து மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு இருக்கிறார். 2-ம் கட்ட பிரசாரத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான த.மா.கா. தொடக்க நாள் முதலே அ.தி.மு.க. வேட்பாளருக்காக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முதல்கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளார். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வீதி வீதியாக சென்று தென்னரசுவுக்கு ஆதரவு திரட்டினார். இன்றும் (திங்கட்கிழமை) அவர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் கேட்கிறார்.
கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் 24 மற்றும் 25-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதாக தெரிவித்து உள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிரசாரத்தை முடித்து சென்று இருக்கிறார். இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்பட அனைவரும் ஈரோட்டுக்கு வந்து வார்டு வாரியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொடக்கத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார். நேற்று ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்குகள் சேகரித்தார். அடுத்தகட்ட தலைவர்கள் ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வார்டு வாரியாக சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியின் அனைத்து கட்டநிர்வாகிகளும் கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பணியாற்றி வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சென்று உள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணியில் புதிதாக இணைந்து உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை வந்தார். அவர் ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
இப்படி ஒட்டுமொத்த கட்சிகளின் தலைவர்களும் ஈரோட்டை நோக்கி படை எடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், அனல் பறக்கும் பிரசாரங்களால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
வாக்குப்பதிவு 27-ந் தேதி நடக்கிறது. எனவே பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
வரும் நாட்களில் இன்னும் பிரசாரத்தின் வேகம் அதிகரிக்கும். தேர்தல் திருவிழா இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்கினார்.
- கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம் என்றார் கமல்ஹாசன்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.
இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன்.
என் பயணத்தைப் பாருங்கள், எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும், போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப்பொருட்கள், மதுபானங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும், போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப்பொருட்கள், மதுபானங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் இதுவரை ரூ.7.36 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.33 மதிப்பில் புகையிலை பொருட்கள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
- நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.
சத்தியமங்கலம்:
கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வசந்த் (19). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வசந்த் தனது கல்லூரி நண்பர்க ளுடன் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் பவானி ஆற்று பகுதிக்கு சென்றார்.
இதையடுத்து வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நீச்சல் தெரியா ததால் அவர் திடீரென நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.
இதை கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்தும் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர்.
- வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாளவாடி ஆசனூர், டி.என்.பாளையம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், மான், சிறுத்தை புலிகள் என பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகின்றன.
ஆசனூர் வனப்பகுதியில் மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளதால் தினமும் கார், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கரும்பு களை ஏற்றி கொண்டு லாரி கள் அதிகளவில் சென்று வருகிறது.
தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி சாலைகளை கடந்து செல்கிறது.
சாலைகளில் உலா வரும் யானை கள் லாரிகளில் உள்ள கரும்புகளை பறித்து தின்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே போல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்துவதும் அடிக்கடி நடக்கிறது.
இதேபோல் ஆசனூர், திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் சுற்றி திரியும் யானைகளை படம் பிடித்து வருகிறார்கள்.
மேலும் ஆபத்தை உணராமல் பலர் யானை முன்பு நின்று செல்பி எடுத்தும் வரு கிறார்கள். ஒரு சில நேர ங்களில் அவர்களை யானை விரட்டியும் வருகிறது.
இதையடுத்து வனத்துறை யினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் வரு கிறார்கள்.
இந்த நிலையில் ஆசனூர் வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதி ரோட்டில் வன சரகர் சிவக்குமார் தலை மையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது காரப்பள்ளம் ஆசனூர் ரோட்டில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதி யில் யானைகள் கூட்டமாக கடந்து சென்றது. இதை யடுத்து அவர்கள் 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி யதாகவும் கூறப்படுகிறது.
இதை கண்ட வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் மைசூரில் இருந்து கோவை க்கு சென்றதும் யானை களுக்கு இடையூறு ஏற்படு த்தியதும், புகைப்படம் எடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து யானைகளுக்கு தொந்தரவு செய்ததாக கூறி அவர்கள் 2 பேருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.
இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, வனப்பகுதி களில் வாகன ங்களில் வரும் பொதுமக்கள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க கூடாது.
இதை மீறி பொதுமக்கள் யானைகளை புகைப்படம் எடுத்தாலும் அவைகளுக்கு தொந்தரவு தந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- பவானி சங்கமேஸ்வரர், காசி விசுவநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- இதில் மூலவருக்கு முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விசுவநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் மூலவருக்கு முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சங்கமேஸ்வரர் கோவிலில் மணிகண்ட குருக்கள், காசி விசுவநாதர் கோவிலில் சிவா சிவாச்சாரியார் ஆகியோர் மூலம் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
இதில் பவானி, குமாரபாளையம், காளிங்கராயன் பாளையம், லட்சுமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.






