என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் பெண் பயணியின் லேப்டாப், செல்போன் திருடிய வாலிபர் கைது
    X

    ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் பெண் பயணியின் லேப்டாப், செல்போன் திருடிய வாலிபர் கைது

    • ஆன்லைன் மூலம் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜை கைது செய்தனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்சீதா(25). இவர் கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டி கொச்சி வேலி-ஷம் சர்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.

    அந்த ரெயில் ஈரோடு வழியாக சென்றபோது ஹர் சீதாவின் லேப்டாப், ஸ்மார்ட் செல்போன், விலை உயர்ந்த கை கடிகாரம், செல்போன் சார்ஜர் என ரூ.1.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஆன்லைன் மூலம் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட போலீசார் காளைமாடு சிலை அருகே பழைய ரெயில்வே காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் கொங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஜெயராஜ் (33) என்பதும் ஹர்சீதாவின் விலை உயர்ந்த லேப்டாப், கைக்கடிகாரம், ஸ்மார்ட் செல்போன், செல்போன் சார்ஜர் போன்ற பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    இதனை அடுத்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×