என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 15 இடங்களில் பிரசாரம்
- சக்தி சுகர்சில் இருந்து கிளம்பும் உதயநிதி ஸ்டாலின் குமலன்குட்டை, முருகேசன் நகர் வழியாக வந்து கணபதி நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை அரசு ஆஸ்பத்திரி அருகே 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். சக்தி சுகர்சில் இருந்து கிளம்பும் உதயநிதி ஸ்டாலின் குமலன்குட்டை, முருகேசன் நகர் வழியாக வந்து கணபதி நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து நாராயணவலசு அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் இடையன் காட்டுவலசு, பிரபா தியேட்டர் வழியாக முனிசிபல் காலனி கருணாநிதி சிலை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அங்கிருந்து மேட்டூர் ரோடு, அகில்மேடு வீதி, நேரு வீதி வழியாக பழனிமலை வீதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் பிருந்தா வீதி ஈஸ்வரன் கோவில் வீதி மணிக்கூண்டு, மெட்ராஸ் ஹோட்டல், கந்தசாமி வீதி, காவிரி ரோடு, மஞ்சள் மார்க்கெட், வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, பழைய ரெஜிஸ்டர் ஆபீஸ் ரோடு போன்ற பகுதிகளில் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து கமலா நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் 50 அடி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியிலும், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதி, அக்ரஹாரம் பகுதி, காந்திநகர் பகுதி பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து முதல் நாள் பிரசாரத்தை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை அரசு ஆஸ்பத்திரி அருகே 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு எஸ்.கே.சி.ரோடு கிராம்படை வழியாக மணல்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். ஆலமரத்து தெரு, மரப்பாலம் மண்டபம் வீதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அய்யனார் கோவில் வீதியிலும், இந்திரா நகர் பகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் மத்தியில் பேசி பிரசாரத்தை நிறைவு செய்கிறார். 2 நாட்களில் உதய நிதிஸ்டாலின் 15 இடங்களில் இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார்.
பிரசாரத்திற்காக ஈரோடுக்கு வரும் அமைச்சர் உதயநிதியை வரவேற்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.






