என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.
    • மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது.

    * மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு செல்லப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    தேர்தலில் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது என அலுவலர் தெரிவித்ததால் அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் சலசலப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மேனகா, தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

    இதனிடையே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

    மேலும், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

    இதனிடையே வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதியடைந்தனர்.

    • ஈரோடு கிழக்கில் 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு வரப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    முன்னதாக, ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
    • வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:

    ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.

    வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.

    2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

    தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.

    வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

    மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார். 

    • மணிகண்டன் சேலையில் தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு, விவேகானந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). ஏ.சி.மெக்கானிக். இவரது மனைவி காவ்யா (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் மணிகண்டனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    மணிகண்டன் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வயிற்று வலி அதிகமாக இருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது காலையில் மருத்துவ மனைக்கு சென்று பார்த்து கொள்ளலாம் என மனைவி காவ்யா ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் காலை காவ்யா கண் விழித்து பார்த்தபோது அறையில் உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்துள்ளது.

    கதவை தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் சேலையில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வி.ஓ.சி வீதி யை சேர்ந்தவர் சின்னசாமி (63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளி யான சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கள்ளி ப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த விழாவுக்கு சின்னச்சாமி சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அந்த வழியாக வந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து 2 தர ப்பினரும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை சின்னசாமி தனது மகன் ரவியிடம் போலீஸ் நிலை யத்திற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததாக தெரி கிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்தும் அவரது மகன் ரவி வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சின்னசாமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதையடுத்து உடனடி யாக அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சின்ன சாமியை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சின்னசாமி உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சின்னசாமி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் ஊராட்சி கோட்டை கே. என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகன் ஹரி கேஸ்வரன் (22). விமான பணிக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதற்காக பவானியில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    தொடர்ந்து அவர் நம்பியூர் அருகே உள்ள பூச்ச நாயக்கன்பாளையம் பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக எதிரில் ஒரு டிப்பர் லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் கார் நொறுங்கி இருபாடுகளில் சிக்கி ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹரிகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசியல் கட்சிகள் சார்பில் 2 வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய பார்முலாவை உருவாக்கி விட்டது.

    திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை மிஞ்சிய அளவுக்கு பணமழை, பரிசு மழை கொட்டியது.

    தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதலே வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சியினர் புதிய வியூகத்தை வகுத்தனர். அதன்படி வாக்காளர்களை அழைத்து சென்று ஒரே இடத்தில் தங்க வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அப்படி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு போகும்போது ரூ.500 பணம், திரும்பி செல்லும்போது ரூ.500 பணம் மற்றும் மதியம் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (27-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பண மழை, பரிசு மழை கொட்டியது. வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சியினர் போட்டிபோட்டு பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. மொத்த வாக்காளர்களில் 50 சதவீதம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதைப்பார்த்த மற்றொரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பணம் கிடைத்தது.

    இதற்கிடையே ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே நிலவியதால் அவர்களை திருப்திபடுத்துவதற்காக அதை ஈடுகட்டும் வகையில் பரிசு பொருட்களை வழங்க அரசியல் கட்சியினர் முடிவு செய்தனர். அதன் பிரதிபலிப்பாக கடந்த 2 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு வெள்ளி டம்ளர், வெள்ளி கிண்ணம், வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ், ஸ்மார்ட் வாட்ச், வேட்டிச்சேலை, குக்கர், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

    மற்றொரு அரசியல் கட்சி சார்பில் அகல் விளக்கு, வெள்ளி டம்ளர், வெள்ளி தட்டு, பேண்ட்-சட்டை, மிக்சி, குடம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு அரிசி டோக்கன், காய்கறி தொகுப்பு டோக்கன் ஆகியவை வழங்கப்பட்டது. வாக்காளர்கள் அந்த அரிசி டோக்கனை குறிப்பிட்ட கடைகளில் கொடுத்து 1 மூட்டை அரிசியையும், காய்கறி கூப்பனை காய்கறி கடைகளில் கொடுத்து காய்கறி தொகுப்பையும் பெற்றுச் சென்றனர்.

    இந்த நிலையில் கச்சேரி சாலையில் உள்ள வீடுகளுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்னை சத்யா நகர், பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் குறைவாக வாக்குகள் பதிவாகும் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை கவருவதற்காக நேற்று ரூ.1500 மதிப்புள்ள பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஒரு வார்டுக்கு 2 ஆயிரம் பேருக்கு என வெள்ளி கொலுசுகளும் நேற்று வினியோகிக்கப்பட்டன.

    குறைவாக ஓட்டுகள் பதிவாகும் பகுதிகளை கணக்கெடுத்து அவர்களை தங்களுக்கு ஓட்டுப்போட வரவழைப்பதற்காக அதிக அளவில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    நேற்று புறநகர் பகுதிகளில் விடுபட்ட வாக்காளர்களுக்கு தேடி தேடிச் சென்று பணம் கொடுத்தனர். ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் தங்கள் தகுதிக்கு ஏற்ற வகையில் பரிசு பொருட்களை வழங்கினார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் தகுந்தபடி பரிசு பொருட்கள் வினியோகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 2 வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    அது என்ன பொருள்? பணமா அல்லது பரிசு பொருளா என்பது தெரியாமல் வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

    எந்த தேர்தலிலும் இதுவரை இல்லாத வகையில் எதிர்பார்க்காத அளவுக்கு பணம், பரிசு பொருட்கள் குவிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலை மிகவும் மலைப்பாக பார்க்கிறார்கள். ஒரு வித்தியாசமான தேர்தலாகவே இதை உணருகிறார்கள்.

    அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    • ஒருவர் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து தான் வாக்களிக்க முடியும்.
    • பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஸ்டராங் ரூம் இன்று திறக்கப்பட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் முன்னிலையில் மண்டல வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இந்த வாக்குபதிவு எந்திரங்கள், பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம். இதற்காக இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை 796 தேர்தல் விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் பல புகாருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களிப்பதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை.

    ஒருவர் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து தான் வாக்களிக்க முடியும். எனவே இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. தேர்தல் நடைபெறும் 238 வாக்கு சாவடிகளிலும் நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×