என் மலர்
ஈரோடு
- பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த நபர் மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை வெடித்ததாக தெரிகிறது.
இதில் இருந்த தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.
இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்த உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி பொது மக்களுக்கு இடை யூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று இரவு அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசார் பட்டாசு வெடித்தவரை பிடித்து விசாரணை நடத்தி னர்.
இதையடுத்து அவரை போலீசார் இது போன்று நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அனைத்து ஓட்டு சாவடிகளிலும் காலை 6 மணி முதலே மக்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தயாராக காத்து இருந்தனர்.
ஓட்டுப்பதிவு தொடங்கியதும் அவர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் அதிக அளவில் வரிசையில் காத்து இருக்கின்றனர்.
ஈரோட்டில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 6 மணிநேரம் 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். இது 44.56 சதவீதம் ஆகும்.
- நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சபீயா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
- வாக்களிக்க விடாமல் தாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறி திடீரென 20-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வாக்குச்சாவடியில் காலையில் இருந்தே அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு இருந்தனர். சுமார் 3 மணி நேரம் வரை வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சபீயா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு குடிக்க கூட அங்கு தண்ணீர் இல்லை.
இதையடுத்து வாக்களிக்க வந்த வாக்காளர்கள் செயற்கையாகவே இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க விடாமல் தாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறி திடீரென 20-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்துக்கு ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.
- காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை 7 மணி முதல் 11 மணிவரை 4 மணிநேரத்தில் 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.
- மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர்.
- எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு சி.எஸ்ஐ. பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரஸ்வதி இன்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன.
எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான் திருமங்கலம் பார்முலா போல ஈரோடு கிழக்கு பார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனர். மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர்.
எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இக்குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.
- அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாக இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபடுவதாகவும், அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே கட்சி கொடியுடன் இருப்பதாகவும் இ-மெயில் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
- 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுகின்றனர்.
- வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாக கே.எஸ்.தென்னரசு குற்றம்சாட்டினார்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுப்பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது என்றார்.
முன்னதாக, வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
- ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
- வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது.
ஈரோடு:
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று ஈ.வி.கே.எஸ்.இங்கோவன் தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும்.
அதேபோல் ராகுல் காந்தியின் தியாக நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும். வரப்போகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, வெள்ளோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமையும்.
எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என என் பெயர் அறிவிப்பதற்கு முன்னாலேயே மக்கள் முடிவு செய்து விட்டனர். எனவே மிகப்பெரிய வெற்றியாக இது அமையும்.
வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்.
தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல் சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடி விட்டனர். எனவே தேர்தல் நல்லபடியாக நேர்மையாக நடக்கிறது.
நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள்.
மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும்.
வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை ஏன் ஆவணமாக ஏற்க மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. எதிர்கட்சிகளை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குசாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவர் அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பித்து உள்ளார்.
- ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதி இல்லை என்று வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கச்சேரி வீதி வாக்குசாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவர் அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பித்து உள்ளார்.
ஆனால் ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதி இல்லை என்று வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆதார் கார்டு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் அந்த பெண் ஆதார்கார்டை ஆவணமாக காட்டி வாக்களித்து சென்றார்.
- பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
- கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் பெரிய அளவில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் சுதந்திரமாக, நியாயமாக ஓட்டுப்போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள் , 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்கினை ஏற்கனவே பதிவு செய்து விட்டனர். இதேப்போல் போலீசாரும் தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.
பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2 மணிநேரமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
- இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.






