என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்- தேர்தல் நடத்தும் அதிகாரி பேட்டி
    X

    மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்- தேர்தல் நடத்தும் அதிகாரி பேட்டி

    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் பெரிய அளவில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் சுதந்திரமாக, நியாயமாக ஓட்டுப்போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×