என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க 3 மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் சாலை மறியல்
- நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சபீயா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
- வாக்களிக்க விடாமல் தாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறி திடீரென 20-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வாக்குச்சாவடியில் காலையில் இருந்தே அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு இருந்தனர். சுமார் 3 மணி நேரம் வரை வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சபீயா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு குடிக்க கூட அங்கு தண்ணீர் இல்லை.
இதையடுத்து வாக்களிக்க வந்த வாக்காளர்கள் செயற்கையாகவே இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க விடாமல் தாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறி திடீரென 20-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்துக்கு ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.






