என் மலர்
ஈரோடு
- பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
- சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீ செல்லியாண்டி யம்மன்- மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 14-ந் தேதி பட்டத்து அரசி அம்மன் கோவில், ஸ்ரீ செல்லாண்டி அம்மன், மாரி யம்மன், சமயபுரம் மாரிய ம்மன் மற்றும் எல்லையம்மன் போன்ற கோவில்களில் பூச்சாட்டுதலுடன் விழா ெதாடங்கியது.
இதையடுத்து 21-ந் தேதி மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் முன்னிலையில் கம்பம் நடப்பட்டு பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
விழாவையொட்டி எந்த கோவிலிலும் இல்லாத வகையில் கருவறைக்கு பக்தர்கள் சென்று அம்ம னுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நேற்று (திங்கட் கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.
இதையொட்டி ஸ்ரீசெல்லி யாண்டியம்மன், மாரி யம்மன் கோவில்களில் உள்ள மூலவர்களுக்கு விடிய, விடிய பால், தயிர், இளநீர், திரு மஞ்சனம், மஞ்சள் என பல்வேறு திரவியங்களை பக்தர்கள் நேரடியாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய, விடிய புனித நீர் ஊற்றி வழிபாடு மேற் கொண்டனர்.
இன்று மதியம் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.
இதையொட்டி பவானி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
- தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.
அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது.
- அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
கோபி:
நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி கோரக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் சண்முகம் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிாிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் நாகேந்திரகுமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
- இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள செளரா பகுதியைச் சேர்ந்த வர் நாகேந்திர குமார்(21). இவரது மனைவி பூஜா. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் புரா கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் உள்ளார்.
நாகேந்திர குமார் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று நாகேந்திர குமார் மனைவி பூஜாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் இடையே போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகேந்திர குமார் உடன் வேலை பார்க்கும் கோவிந்தன் என்பவர் நாகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் நாகேந்திர குமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
- இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
சென்னிமலை:
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எக்கட்டாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசு மற்றும் தட்டாரவலசு.
இந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி களுக்கு செல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
ஆனால் இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து புதுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 70 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
ஆனால் இதுவரை தார் ரோடு போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து வருகிறது.
மேலும் புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. மேலும் இந்த வழியாக பள்ளி வேன்களில் செல்லும் குழந்தைகளும் புழுதியால் மிகவும் பாதிக்கின்றனர்.
எனவே இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அறையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதே போல் வேட்பாளர்களின் பிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
- சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 130 முதல் 140 பேர் வீதம் மொத்தம் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 8.56 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது.
238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைத்தனர்.
சுமார் இரவு 8 மணி முதல் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கின.
இறுதியாக வாக்குப்பதிவு முடிவடைந்த ராஜாஜிபுரம் 153-ம் எண் வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டும் சுமார் 11.30 மணிக்கு மேல் மையத்தை வந்தடைந்தன.
வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சென்றடைந்ததும் அறைகளில் வைக்கப்பட்டன. கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், பொதுப் பார்வையாளர் ராஜகுமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் தனி குழுவினர் கண்காணிக்கி றார்கள்.
11 வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 130 முதல் 140 பேர் வீதம் மொத்தம் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
இதுதவிர 2 தீயணைப்பு வாகனங்களும் 40 தீயணைப்பு வீரர்களும் கண்காணிப்பு பணியில் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற யாருக்கும் அங்கு அனுமதி இல்லை.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. 16 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடக்கிறது. ஒரு அறையில் 10 மேஜைகளிலும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஒரு மேஜையில் வாக்கு எண்ணும் பணியில் 2 அலுவலர்களும் அதை மேற்பார்வையிடும் பணியில் ஒரு நுண் பார்வையாளரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மொத்தம் 32 அலுவலர்கள், 16 நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
அன்று மதியத்துக்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் தெரியவரும். மாலைக்குள் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அலுவலர் சிவக்குமார் விளக்கம்.
- வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 74.69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதில், ஆண்கள் - 82,021, பெண்கள் - 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- இடைத்தேர்தலில் மொத்த வாக்கு சதவீதம் 70.58 ஆக பதிவாகி இருக்கிறது.
- வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் துவங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வந்தனர். இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காலை 7 மணி முதல் 5 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் இருந்த நிலையில் மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட தற்போது வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் 66.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இடைத்தேர்தலில் மொத்த வாக்கு சதவீதம் 70.58 ஆக பதிவாகி இருக்கிறது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன.
- இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுவதால் மேலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வந்தனர்.
இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், காலை 7 மணி முதல் 5 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில்மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 2021 சட்டசபை பொதுத்தேர்தலை விட தற்போது வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுவதால் மேலும் கூடுதல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதில், ஆண்கள்- 77,183, பெண்கள்- 83,407, மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேர் என மொத்தம் 1,60,603 பேர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 66.56 என்பது குறிப்பிடத்தக்கது.
- இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தற்போது வரை 65,350 ஆண்களும், 69, 400 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேரும் என மொத்தம் 1,34,758 பேர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது வரை 65,350 ஆண்களும், 69,400 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேரும் என மொத்தம் 1,34,758 பேர் வாக்களித்துள்ளனர்.
- வெயிலின் தாக்கம் காரணமாக சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
- ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. 10-ந் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்கு சேகரித்தனர். இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
இதேப்போல் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்கினை ஏற்கனவே பதிவு செய்து விட்டனர். இதேப்போல் போலீசாரும் தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.
பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தப்பட்டு இருக்கும். 77 பேர் போட்டியிடுவதால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. இந்த 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 80 வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தலாம். ஆனால் இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுவதால் 78-வதாக நோட்டா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் 1,190 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள். வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 238 எந்திரங்கள் ( வி.வி. பேட்), 238 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட்) பயன்படுத்தப்படுகிறது.
நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பதிவான வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி முதல் 2 மணி நேரத்தில் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
காலை 11 மணி நேர நிலவரப்படி 27.89 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். இது 44.56 சதவீதம் ஆகும்.
வெயிலின் தாக்கம் காரணமாக சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் உடன் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேப்போல் கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசாரும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதட்டமான வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினை சி.சி.டி.வி. கேமரா பொருத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி, சென்னையில் இருந்து தமிழக தேர்தல் அதிகாரி, டெல்லியில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டது. 238 வாக்கு சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவுனை கண்காணித்தனர். தேர்தலில் வாக்களிக்கும் வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும் நான்கு புறமும் 200 மீட்டர் தூரத்தில் அரசியல் கட்சியினர் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர்.
முதன் முதலில் தேர்தலில் வாக்களிக்க ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதேப்போல் இளைஞர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களிக்க வந்த பொது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அந்தந்த நிலைய அலுவலர்கள் விளக்கம் அளித்து அவர்கள் வாக்களிக்க உதவினர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு செல்லப்படும்.
அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்படும். அந்த அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
மார்ச் மாதம் 2-ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பாளர்கள் முகவர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும்.
அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும். 77 பேர் போட்டியிடுவதால் 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.






