என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மனுக்கு நேரடியாக"

    • பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
    • சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீ செல்லியாண்டி யம்மன்- மாரியம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 14-ந் தேதி பட்டத்து அரசி அம்மன் கோவில், ஸ்ரீ செல்லாண்டி அம்மன், மாரி யம்மன், சமயபுரம் மாரிய ம்மன் மற்றும் எல்லையம்மன் போன்ற கோவில்களில் பூச்சாட்டுதலுடன் விழா ெதாடங்கியது.

    இதையடுத்து 21-ந் தேதி மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் முன்னிலையில் கம்பம் நடப்பட்டு பெண்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    விழாவையொட்டி எந்த கோவிலிலும் இல்லாத வகையில் கருவறைக்கு பக்தர்கள் சென்று அம்ம னுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நேற்று (திங்கட் கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

    இதையொட்டி ஸ்ரீசெல்லி யாண்டியம்மன், மாரி யம்மன் கோவில்களில் உள்ள மூலவர்களுக்கு விடிய, விடிய பால், தயிர், இளநீர், திரு மஞ்சனம், மஞ்சள் என பல்வேறு திரவியங்களை பக்தர்கள் நேரடியாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய, விடிய புனித நீர் ஊற்றி வழிபாடு மேற் கொண்டனர்.

    இன்று மதியம் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி பவானி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    ×