search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டில் ஜல்லி கற்களை கொட்டி கிடப்பதால் பொதுமக்கள் அவதி
    X

    ரோட்டில் ஜல்லி கற்களை கொட்டி கிடப்பதால் பொதுமக்கள் அவதி

    • தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.
    • இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எக்கட்டாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசு மற்றும் தட்டாரவலசு.

    இந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி களுக்கு செல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார் ரோடு போடு வதற்காக ரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து புதுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தார் ரோடு போடுவதற்காக கடந்த 70 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

    ஆனால் இதுவரை தார் ரோடு போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து வருகிறது.

    மேலும் புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. மேலும் இந்த வழியாக பள்ளி வேன்களில் செல்லும் குழந்தைகளும் புழுதியால் மிகவும் பாதிக்கின்றனர்.

    எனவே இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தார் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×