என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுடன் ஆலோசனை

    • வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அறையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது.

    வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு இருந்த வசதிகள், ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதே போல் வேட்பாளர்களின் பிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×