என் மலர்
ஈரோடு
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது.
- வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளான எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம்தேதி நடந்தது.
- முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள்.
முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.
- அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 74.89 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை காலை ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள்.
முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடை பெறு வது வழக்கம்.
இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் விழா தொடங்கியது. இத னைத் தொடர்ந்து 21-ந் தேதி மாரியம்மன் கோவி லில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து 22-ந் தேதி செல்லாண்டி அம்மன் கோவிலில் கொடியேற்ற ப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 12 மணி வரை ஆயிரக்கண க்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து செல்லாண்டி அம்மன் கோவிலில் இருந்து புது பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில் வரை சக்தி அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாட்டனர்.
அதேபோல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின் போது எல்லையம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி அழைத்து வரப்பட்டது.
அப்போது ஆயிரக்க ணக்கான பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டும் அம்மன் வேடம் உள்பட பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் உப்பு, மிளகு, வாழைப்பழம், தேங்காய், பிஸ்கட், புது துணி, பேனா, பென்சில் உட்பட பல வகை யான பொருட்களை சூறை யிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை செல்லாண்டி யம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.
நாளை இரவு 8 மணிக்கு கம்பம் எடுத்து காவிரி ஆற்றில் விடப்படு கிறது. வரும் 3-ந் தேதி பரிவேட்டையும், 4-ந் தேதி தெப்ப உற்சவம், 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
- வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.
அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.
இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் சாயுபுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய இளைய மகன் சந்திரமோகன் (46). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சந்திரமோகன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்க சென்று விட்டார். அவரது தாய் சரஸ்வதி அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவில் சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர்.
இதில் அவர் வீட்டில் இருந்து வெளியே எழுந்து வர முயன்ற போது புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.
இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பார்த்தபோது சந்திரமோகன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
- சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் தரும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.
- கிழக்கு தொகுதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. போலீஸ் சார்பில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ட்ராங் ரூமுக்கு இரண்டு கம்பெனி மத்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளூர் போலீசார் என 750 க்கும் மேற்பட்டோர் 2 மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. எவை எடுத்து வர வேண்டும் எதை எடுத்து வரக்கூடாது என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் தரும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.
எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தண்ணீர் பாட்டில் இங்க் பென் தீப்பெட்டி போன்ற பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலவே கிழக்கு தொகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு தொகுதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
- தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 74.89 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்று வட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தயார் நிலையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர்.
இந்த தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை காலை ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள்.
இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. இதற்காக ஒலி பெருக்கிகள் கட்டப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் கொண்டு வரக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. கூர்மையான ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
மேலும் அடையாள அட்டை காட்டினால் மட்டுமே வேட்பாளர்களின் முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் 4500 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.
- கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர் புறம் அமைந்துள்ளது.
இங்கு விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
அந்த வகையில் அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம்,
பச்சம் பாளை யம், கள்ளிமடை குட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தி களை அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பருத்திகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண் காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் புளி யம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்திகளை ஏலம் எடுக்கிகிறார்கள். இதை தொடர்ந்து விளை ச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த வாரம் விவசாயிகள் 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். ஆனால் இந்த வாரம்அதிக அளவில் 4 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் வந்திருந்தனர்.
இதனால் கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் 500 மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






