சரக்கு வாகனம் மீது மொபட் மோதி நகை கடை ஊழியர் பலி

மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
சரக்கு வாகனம் மீது மொபட் மோதி நகை கடை ஊழியர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com