search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீதம் வாக்குப்பதிவு
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீதம் வாக்குப்பதிவு

    • பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பாக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள் , 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்கினை ஏற்கனவே பதிவு செய்து விட்டனர். இதேப்போல் போலீசாரும் தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்துவிட்டனர்.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2 மணிநேரமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவாகும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    Next Story
    ×