என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ.சி. மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை
- மணிகண்டன் சேலையில் தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு நாராயணவலசு, விவேகானந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). ஏ.சி.மெக்கானிக். இவரது மனைவி காவ்யா (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மணிகண்டனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
மணிகண்டன் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வயிற்று வலி அதிகமாக இருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது காலையில் மருத்துவ மனைக்கு சென்று பார்த்து கொள்ளலாம் என மனைவி காவ்யா ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் காலை காவ்யா கண் விழித்து பார்த்தபோது அறையில் உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்துள்ளது.
கதவை தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் சேலையில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






