மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com