என் மலர்
ஈரோடு
- 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர்.
- ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரதி நகரில் சொந்தமான வீடு உள்ளது.
இவரது வீட்டை கோபிசெட்டி பாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். அதன்படி முன்பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார்.
நேற்று மதியம் சுதர்சன் மீண்டும் புதிதாக வாங்க இருக்கும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 4 பேக்குகளில் இருந்த ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோபி செட்டிபாளையம் போலீசார் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர். தனிப்படை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருட்டு நடந்த வீட்டில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது அவை செயல்படாதது என்று தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பணத்தை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வளவு பணம் வீட்டில் வைத்து இருக்கும் தகவல் சுதர்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எனவே அவர்கள் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விடிய,விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டிப்பர் லாரியில் அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
- போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே லாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவதாக பவானி தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னு சாமி, உதவியாளர் ரவிக்குமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பவானி - மேட்டூர் ரோட்டில் மாணிக்கம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்கா பாளையத்தை சேர்ந்த ஒசுவங்காட்டை சேர்ந்த முனுசாமி என்பதும், லாரி யின் உரிமையாளர் சங்க கிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் லாரியை வாடகைக்கு எடுத்து செம்மண்ணை கடத்தி சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.
ஈரோடு:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 7- வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில கூட்டமைப்பு சார்பில், 3 கட்ட போராட்டங்கள் நடத்த அறிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். அதே நேரம், தங்களது கோரிக்கை யை மனுவாக தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களிடமும் வழங்க திட்டமிட்டனர்.
இதன்படி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், விஜயமனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி சாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி ஆகியோரிடம் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு வழங்கினர்.
- ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுதர்சன், புது வீடு வாங்க ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
- இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் சுதர்சன். இவர் புதிய வீடு வாங்குவதற்காக ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், வீட்டின் கதவை உடைத்து 2.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். பணம் கொள்ளை போனது குறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 36,635 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன
- நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ள்ளன
ஈரோடு வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் ஆண்-ந் தேதி வரை 27.34 மி.மீ. மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.92 அடியாகவும், இருப்பு 21.26 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 98,172 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 36,635 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாவட்டத்தில் கோடை உழவுப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக 31.70 டன் விதை நெல், சிறுதானியங்கள் 2.4 டன், பயறு வகைகள் 11 டன், எண்ணெய் வித்துகள் 4.5 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரசாயன உரங்களான யூரியா 3,726 டன், டி.ஏ.பி. 2,722 டன், பொட்டாஷ் 870 டன், காம்ப்ளக்ஸ் உரம் 8,823 டன் இருப்பு வைக்கப்பட்டு, தேவையான விவசாயிகளுக்கு வினியோகிக்க ப்படுகிறது.
நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
ஈரோடு:
ஈரோட்டில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணை ப்பா ளர்கள் விஜயமனோகரன், வீராகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேசியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
7-வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
முன்ன தாக நம் கோரிக்கை நிறை வேற்றாவிட்டால் வரும் 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்பார்கள்.மேலும் நமது கோரிக்கை மனுவை தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ.க்க ளிடமும் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாவிலும் நடை பெறவுள்ளது
- ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வழங்கித் தீர்வு பெறலாம்
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாவிலும் நடை பெறவுள்ளது.
அந்தந்தத் தாலுகா பகுதிக்கு உட்பட்ட 1 இடத்தில் உள்ள ரேஷன் கடையில் காலை 10 மணிக்கு இக்குறைதீர் முகாம் நடைபெறும்.
இதில் பொதுமக்கள், புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வழங்கித் தீர்வு பெறலாம்.
அதன்படி, ஈரோடு தாலுகாவில், வில்லர சம்பட்டி பல்நோக்கு சமுதா யக் கூடம், பெருந்துறை– பணிக்கம்பாளையம், மொடக்குறிச்சி – கனகபுரம், கொடுமுடி – ஊ.கொளத்து ப்பாளையம், கோபி – குள்ளநாயக்கனூர், நம்பியூர் – சாந்திபாளையம், பவானி – பனங்காட்டூர், அந்தியூர் – வெள்ளிதிருப்பூர், சத்திய மங்கலம் – அரியூர், தாளவாடி– தொட்டகாஜனூர் ஆகிய ரேஷன் கடைகளில் இக்குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
- புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.
- நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் பெரும் விழாவின் சிறப்பு வழிபாடு பங்கு தந்தை தலைமையில் நடக்கிறது.
ஈரோடு:
புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சிலுவையில் அரையப்பட்டு மரணம் அடைந்த நிகழ்வை புனித வெள்ளியாக கொண்டா டப்பட்டு வருகிறது.
இதனை நினைவு கூறும் வகையில் சிலுவையில் இயேசு கிறிஸ்து அரைபட்டதை மையமாக வைத்து 14 தலங்களில் சிலுவைப் புறப்பாடு வழிபாடாக நடந்தது.
புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப் தாஸ் சிலுவை பாதை வழிபாட்டை வழி நடத்தினார்.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கடும் வெயி லையும் பொருட்படுத்தாமல் பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு திருச்சிலுவை வழிபாடும், தொடர்ந்து சிலுவை முத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இது தொடர்ந்து நாளை இரவு 10.30 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு (ஈஸ்டர்) பெரும் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் பெரும் விழாவின் சிறப்பு வழிபாடு பங்கு தந்தை தலைமையில் நடக்கிறது.
- ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்
- தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இன்று மாலை தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்.
இதனை காண அந்தியூர் தவுட்டு ப்பாளையம் வெள்ளை யம்பாளையம், சின்னத்த ம்பிபாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், செல்லம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை தேரில் அம்மன் அலங்கரிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- ஆபாசமாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டல்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்
கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணை விக்னேஷ் தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததா கவும், அந்த பெண் மயக்கமாக இருந்த போது அவருடன் ஆபாச மாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்போது விக்னேஷ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் விக்னேஷ் ஆபாச படங்களை அனுப்பி யதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்
- திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலம் வடுகனூர் தொட்டியன் குட்டை வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட னர்,
விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமலையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் திருமலை (வயது 29) வாய்க்காலில் பிணமாக மிதந்தது தெரியவந்தது, இவர் எழுமாத்தூர் அருகே அய்ய கவுண்டம்பா ளையத்திற்கு வந்து தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு திரு மலையை காணவில்லை. இதையடுத்து திருமலையின் தந்தை லட்சுமணன் அவரை தேடி வந்தார் அப்போது திருமலை அய்யகவுண்டம் பாளையம் வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்ததாகவும் அப்போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது.
இத குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதியது
- விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (50) விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சிவ நந்தினி (17), என்ற மகளும், அனிருத் (15) என்ற மகனும் உள்ளனர். சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சிவ நந்தினிக்கு சத்திய மங்கல த்தில் உள்ள ஒரு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக கந்தசாமி, அவரது மனைவி நிர்மலா, மகள் சிவநந்தினி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர்கள் குமாரபாளை யத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிள் பவானி அந்தியூர் மெயின் ரோடு காடையா ம்பட்டி ஏரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் சிவநந்தினி மற்றும் நிர்மலா ஆகியோர் படு காயம் அடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானி அரசு மருத்துவ மனை யில் முதல் சிகிச்சை மேற்கொண்ட பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் மகள் சிவ நந்தினி இறந்தார்.
நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த கந்தசாமி மற்றும் அவரது மகள் சிவ நந்தினி ஆகியோரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






