என் மலர்
ஈரோடு
- வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஈரோடு:
கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் குளித்து குதூகளித்து செல்கிறார்கள்.
இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்கள் கொட்டும் தண்ணீரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞ ர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது.
குடும்பத்துடன் கொடி வேரி வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செயய்ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.
- மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பாரதிநகரில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். வீட்டை ரூ.3 கோடிக்கு வாங்க சுதர்சன் முடிவு செய்தார். அதன்படி முன் பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சுதர்சன் அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை புதிய வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார். வீட்டில் பணம் இருக்கும் விஷயம் சுதர்சன் பங்குதாரர்களான கோபி அடுத்த களஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), கோபி அடுத்த கேடாரை பகுதியை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுதர்சன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் சுதர்சன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, வடிவேல்குமார், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செ ல்வம் ஆகிய கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. அதில் 2 பேர் சென்றதும் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களான ஸ்ரீதர் மற்றும் பிரவீன் என்ன தெரிய வந்தது. இதில் ஸ்ரீதர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களாக ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் இருந்துள்ளனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் சுதர்சனன் வீட்டில் ரூ.2.80 கோடி பணம் இருப்பது ஸ்ரீதருக்கும், பிரவீனுக்கும் தெரிந்து உள்ளது. பணத்தைத் திருட 2 பேரும் திட்டம் போட்டு உள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று வெள்ள நிற காரில் வந்து வீட்டுக்குள் இருந்த ரூ.2.80 கோடி பணத்தை 4 பேக்குகளில் வைத்து திருடி சென்றுள்ளனர். முதலில் சுதர்சனத்துடன் ஸ்ரீதரும் புகார் கொடுக்க வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.
பின்னர் உரிய முறையில் விசாரித்தபோது 2 பேரும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். முதலில் வெள்ளை காரில் பணத்தை திருடி அவர்கள் பின்னர் சிறிது தூரம் சென்றதும் அந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் சென்று உள்ளனர். அந்த காரில் தான் பணத்தை வைத்திருந்தனர். நாங்கள் அந்த காரில் இருந்த பணத்தை மீட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் மட்டுமின்றி போலீஸ் நிலைய சுற்று வட்டார பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பணம் திருடப்பட்ட அதற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளினை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், கடந்த 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி புனித வெள்ளியையொட்டி சிலுவை வழிபாடு நடந்தது.
இந்நிலையில் ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் ஈரோடு புனித அமல அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஒளி வழிபாடும், திருமுழுக்கு (ஞானஸ்நானம்) புதுப்பித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
ஈஸ்டரையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்குதந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியர், உதவி பங்கு தந்தை நல்ல ஜேக்கப்பதாஸ் ஆகியோர் தலைமையில் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச், ஈரோடு ெரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும், பி.பெ. அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயத்திலும், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயத்திலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி இன்று அதிகாலை வரை சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்தும் மகிழ்ந்தனர்.
- மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், அரசின் மகப்பேறு சிரஞ்சீவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசின் மகப்பேறு சஞ்சீவி திட்டம் மூலம் சித்த மருத்துவ பெட்டகம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.
தாய், சேய் இறப்பு விகிதம் குறைக்க, கர்ப்பிணி தாய்மார்களின் ரத்த சோகை தடுக்க சித்த மருந்துகள் வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் தாளவாடி, பர்கூர் மலைவாழ் மக்களுக்கும் ரத்த சோகை தடுப்பு சித்த மருந்துகள் ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4094 பேர் பயனடைந்துள்ளனர். அங்கன்வாடி குழந்தை களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் சித்த மருத்து பெட்டகம் 263 குழந்தை களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சையின் மூலம் இதுவரை 23,876 பேர் பயன் அடைந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் தொற்றா நோய் களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்க ளுக்கு ஆயுஷ் சிகிச்சை அளிக்கப்பட்டு 2,487 நோயாளிகள் பயனடை ந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்காலத்தில் சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 699 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு எவ்வித மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வீடுகளுக்கு சென்று நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற மருந்துகள் வழங்கும் திட்டம் மாநிலத்தில் முதல் முதலாக நம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு, ஏப். 9-
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 2 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 968 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.
- பெற்றோர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மணிகண்டனுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்ட போது தான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் மணிகண்டனுக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்குனி உத்திர திருவிழாவில் மகா தரிசனம் நடந்தது.
- பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் மகா தரிசனம் நடந்தது.
இதை தொடர்ந்து சென்னிமலை கைலாச நாதர் கோவிலில் முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி பல்வேறு ஹோம திரவிங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடந்தது. டவுன் நான்கு ராஜா வீதிகளில் சாமி உலா வந்து கைலாசநாதர் கோவிலை அடைந்தது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது.
- பக்தர்கள் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள்.
- கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்க–ளிலும் நடப்பட்ட கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் புனித நீரூற்றி வழிபட்டு வருகின்றனர். குண்டம் விழா, தேர் திருவிழா போன்றவை நடந்து முடிந்து விட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 3 கோவில்களிலும் நடப்பட்ட கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதில் பக்தர்கள் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3 கோவில்களிலிருந்து பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும்.
அங்கிருந்து ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அப்போது பக்தர்கள் வழி நெடுங்கும் நின்று கம்பங்கள் மீது உப்பு, மிளகு வீசுவார்கள்.
அதன் பிறகு கம்பங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் கம்பம், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு சென்று 3 கோவில் கம்பங்களும் ஒன்று சேர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதி,
காமராஜ் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில்,
நேதாஜி சாலை, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம், மண்டபம் வீதி, கச்சேரி வீதி, ஆர்.கே.வி., சாலை, நகர போலீஸ் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக காரை வாய்க்காலில் கம்பம் விடப்படுகிறது.
இச்சாலை பகுதியில் வாகன ஓட்டிகள் வராமல், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேநேரம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சேலம், திருச்செங்கோடு, நாமக்கலில் இருந்து வரும் வாகனங்கள், பள்ளிபாளையம் வழியாக காவிரி சாலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி, வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு, காவிரி சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், லோட்டஸ் ேஷாரூம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, வீரபத்திர 2-ம் வீதி வழியாக வ.உ.சி. தெற்கு வாயில் வழியாக திரும்பி வீரபத்திர முதல் வீதி வழியாக சத்தி சாலையை அடைய வேண்டும்.
பவானி, அந்தியூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி செல்ல வேண்டும்.
திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கனரக வாகனங்கள், காவிரி சாலை, திருநகர் காலனி, அசோசியேசன் பெட்ரோல் பங்க், வீரபத்திர வீதி, வீரப்பன்சத்திரம், கனிராவுத்தர் குளம், சித்தோடு வழியாக செல்ல வேண்டும்.
கோவை, திருப்பூரில் இருந்து வரும் வாகனங்கள், பெருந்துறை வழியாக பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வலது புறம் திரும்பி பயணிகளை இறக்கிவிட்டு பெருந்துறை சாலையில் செல்ல வேண்டும்.
தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் ஊர்வலம் புறப்பட்டு மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் சாலைக்கு திரும்பும் வரை, காளை மாட்டு சிலை, ெரயில்வே ஸ்டேஷன் சாலை, ஈ.வி.என்.சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, வாசுகி வீதி வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
ஊர்வலம் காமராஜ் வீதி அடைந்ததும், காளை மாட்டு சிலையில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பெருந்துறை சாலை, வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக,
வில்லரசம்பட்டி நால் ரோடு சென்று, கனிராவுத்தர் குளம், வீரப்பன்சத்திரம், 16-ம் எண் சாலை வழியாக பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரிங்ரோடு வழியாக கொக்கராயன்பேட்டை வழியாக செல்ல வேண்டும்.
இதர இலகு ரக வாகன ஓட்டுனர்கள் கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மற்ற வழிகளை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). இவரது மனைவி தேவயானி. ராஜா மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று சங்கராபாளையம் கிராமத்தில் உள்ள தப்பக்காரன் தோட்டம் தாமரை செல்வி கரும்பு தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தபோது ராஜாவின் வலது கெண்டைக்காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக ராஜா கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபால்ராஜா சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.
- கோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளபாளையம், பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்ராஜா (30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
கோபால் ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலியும் இருந்து வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் கோபால் ராஜாவை குடிக்க வேண்டாம் என கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கோபால் ராஜா குடிப்பழக்கத்தை மறக்க முடியாமல் சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சீரங்காயி (52).
கடந்த 1-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பி.கே.வலசு குமரப்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தனர்.
இதேபோல் சம்பவத்தன்று சீரங்காயி தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீரங்காயி பாம்பு.. பாம்பு.. என்று கத்தினார்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சீரங்காயி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் கே.வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களும் உள்ளது.
இங்கு 10 ஆண்டுகளாக இரவு காவலரை நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.
எனவே இப்பள்ளியின் நலன் கருதி இரவு காவலாளியை பணியமர்த்த வேண்டும்.
பள்ளி துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






