குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து டீ மாஸ்டர் தற்கொலை

மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார்.பெற்றோர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து டீ மாஸ்டர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அம்மன் கோவில் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

மணிகண்டனுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் கேட்ட போது தான் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மணிகண்டனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

பின்னர் மீண்டும் மணிகண்டனுக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com