என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைகள் கையிருப்பு"

    • 36,635 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன
    • நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ள்ளன

    ஈரோடு வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் ஆண்-ந் தேதி வரை 27.34 மி.மீ. மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.92 அடியாகவும், இருப்பு 21.26 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 98,172 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 36,635 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மாவட்டத்தில் கோடை உழவுப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக 31.70 டன் விதை நெல், சிறுதானியங்கள் 2.4 டன், பயறு வகைகள் 11 டன், எண்ணெய் வித்துகள் 4.5 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரசாயன உரங்களான யூரியா 3,726 டன், டி.ஏ.பி. 2,722 டன், பொட்டாஷ் 870 டன், காம்ப்ளக்ஸ் உரம் 8,823 டன் இருப்பு வைக்கப்பட்டு, தேவையான விவசாயிகளுக்கு வினியோகிக்க ப்படுகிறது.

    நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு ள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×