என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "at St. Amala Anai Shrine"

    • புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.
    • நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் பெரும் விழாவின் சிறப்பு வழிபாடு பங்கு தந்தை தலைமையில் நடக்கிறது.

    ஈரோடு:

    புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சிலுவையில் அரையப்பட்டு மரணம் அடைந்த நிகழ்வை புனித வெள்ளியாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதனை நினைவு கூறும் வகையில் சிலுவையில் இயேசு கிறிஸ்து அரைபட்டதை மையமாக வைத்து 14 தலங்களில் சிலுவைப் புறப்பாடு வழிபாடாக நடந்தது.

    புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப் தாஸ் சிலுவை பாதை வழிபாட்டை வழி நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கடும் வெயி லையும் பொருட்படுத்தாமல் பிரார்த்தனை செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு திருச்சிலுவை வழிபாடும், தொடர்ந்து சிலுவை முத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இது தொடர்ந்து நாளை இரவு 10.30 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு (ஈஸ்டர்) பெரும் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் பெரும் விழாவின் சிறப்பு வழிபாடு பங்கு தந்தை தலைமையில் நடக்கிறது.

    ×