இளம்பெண்ணின் கணவருக்கு ஆபாச படம் அனுப்பி கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

ஆபாசமாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டல்போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்
இளம்பெண்ணின் கணவருக்கு ஆபாச படம் அனுப்பி கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணை விக்னேஷ் தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததா கவும், அந்த பெண் மயக்கமாக இருந்த போது அவருடன் ஆபாச மாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்போது விக்னேஷ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் விக்னேஷ் ஆபாச படங்களை அனுப்பி யதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com