search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா
    X

    பத்ரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

    • ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்
    • தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இன்று மாலை தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்.

    இதனை காண அந்தியூர் தவுட்டு ப்பாளையம் வெள்ளை யம்பாளையம், சின்னத்த ம்பிபாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், செல்லம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை தேரில் அம்மன் அலங்கரிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    Next Story
    ×