என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடைசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் கோபால்குமார். டிராக்டர்டிரைவர். இவரது மனைவி ரேவதி (27). இவர் செட்டி தோட்டம் என்ற பகுதியில் தனியார் தறிகுடோனில் வேலைப்பார்த்து வந்தார்.

    வழக்கம் போல் நேற்று காலையும் கோபால்குமார், தனது மனைவி ரேவதியை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் தறி குடோனில் வேலை செய்து கொண்டு இருந்த ரேவதி மாலையில் திடீரென தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தனது கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்து உள்ளார்.

    கோபால்குமார் வருவதற்குள் தறிபட்டறை உரிமையாளர் தனது காரிலேயே ரேவதியை நம்பியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் ரேவதியின் கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் ரேவதி இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    காலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் கடைகள், நுகர்வோர் வாணிப கழக கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பெருந்துறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசி சரியான அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.

    மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதையும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடை போட்டு அவர் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.
    • கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நாகதேவம்பாளையம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்று வேளாண்துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்களின் மானிய விவரங்கள் உள்ளிட்ட நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கமளித்ததுடன் உலக சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் ரவீந்திரன் தலைமையேற்றார். ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு , வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பதில் வேளாண் துறையின் பங்குகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்வணிகம், வேளாண் விற்பனைத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,

    கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய ஆராய்சியாளர் மற்றும் சத்தி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவரவர் துறை சார்ந்த அரசின் மானிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதுடன் கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

    மேலும் கால்நடைத் துறையின் சார்பாக கால்நடைகளுக்கான குடற்புழுநீக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இவ்விழாவின் முடிவில் வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

    சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இலவசவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன். நாகதேவன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கடுக்காம்பாளையம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் நடப்பட்டது.

    இந்நிகழ்சியில் நாகதேவம்பாளையத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜனரஜ்ஜனி, வான்மதி, குமார், பெரியசாமி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
    • முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி ஈரோடு வட்டத்திற்கு கரட்டுப்பாளையம் ரேஷன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெறுகிறது. பெருந்துறை வட்டத்திற்கு கருமாண்டி செல்லிபாளையம்-௧ ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    மொடக்குறிச்சி வட்டத்திற்கு ஆயி கவுண்டன் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடை பெறுகிறது. கொடுமுடி வட்டத்திற்கு காரவலசு ரேஷன் கடையில் ஈரோடு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலை மையில் நடைபெறுகிறது.

    கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு ஆலங்கா ட்டுப்புதூர் ேரஷன் கடையில் கோபி செட்டிபாளையம் வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    நம்பியூர் வட்டத்திற்கு குருமந்தூர் ரேஷன் கடையில் கோபி செட்டிபாளையம், வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது. பவானி வட்டத்திற்கு மாணிக்கம் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

    அந்தியூர் வட்டத்திற்கு முகாசிபுதூர் ரேஷன் கடையில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. சத்தியமங்கலம் வட்டத்திற்கு கூத்தம்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

    தாளவாடி வட்டத்திற்கு இக்கலூர் ரேஷன் கடையில் கோபிசெட்டிபாளையம் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது.
    • 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை அடுத்த தாளக்கரை பகுதி யில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட சமூக நல குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர் சண்முகவடிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஞானசேகரன், சுபாஷினி, தேவகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நில வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் சிறுமியைத் திருமணம் செய்த ஜோகி (22) உள்பட 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் படி போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
    • கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

    அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 162 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
    • பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வருகிற 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் தானியங்கி கேமிராக்களை கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    அதன்படி 12-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 13-ந் தேதி நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி (காலை மற்றும் மாலை) நடக்கிறது.

    14-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 15-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும்,

    16-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்களும், 17-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.

    தொடர்ந்து 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தானியங்கி கேமிரா பொருத்தும் பணிகள் நடக்கிறது. 27-ந் தேதி முதல் தானியங்கி கேமிரா கண்காணிக்கும் பணி நடக்கிறது.

    28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தானியங்கி கேமிரா அகற்றும் பணிகளும், 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை புகைப்பட கருவிகளை கொண்டு செல்லுதலும் நடக்கிறது. தொடர்ந்து போட்டோ தரவுகளை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.

    இந்த நிலையில் வனவி லங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    அப்போது அவர்களுக்கு பல்ேவறு ஆலோசனைகளை வழங்கினர். வன உயிரின கணக்கெ டுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும். களப்பணியாளர்கள் அவரவர்களுக்கு உரிய சீருடையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    வன உயிரினக் கணக்கெடுப்பு பணியின் போது ஓய்வு எடுக்கும் இடம், உணவு அருந்த அமரும் இடம் பாதுகா ப்பானதாக இருக்கின்றதா? என்பதனை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    அதாவது நான்கு திசைக ளில் வன உயிரினங்கள் வந்தால் எளி தில் அறிய கூடிய வகையில் நான்கு திசைகளிலும் பார்க்ககூடிய வண்ணம் பாதுகாப்பினை உறுதி படுத்தி களப்ப ணியாளர்கள் அமரவே ண்டும்.

    வன உயிரின கணக்கெடு ப்பு பணியின் போது செல்போன்களை பயன்படு த்திக் கொண்டு நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    ஏனெனில் வன விலங்குகள் அருகில் இருந்தால் அதனை நம்மால் உணர இயலாமல், பாதுகா ப்பற்ற சூழ்நிலைகள் உருவாக்ககூடும் என்பது உள்பட ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.

    • வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார்.
    • சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு சாமி. இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்து லட்சுமி (வயது 29). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்துலட்சுமி கணவன் இறந்தது முதல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
    • மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார்.

    ஆப்பக்கூடல்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (28). இவரது மனைவி கீர்த்தனா (24). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டை புதூரில் ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர், கீர்த்தனாவின் சகோதரரும் இந்த தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது சகோதரன் கண்டித்தார். ஆனால் அதை கேட்காமல் கீர்த்தனா தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதையடுத்து அவரது சகோதரர் சிம் கார்டை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார், கீர்த்தனாவை காணவில்லை என்று அவரது தாய் ஜெயமாளுக்கு, கணவர் வீரபத்திரன் தகவல் கொடுத்தார். இதையடுத்து மாயமான கீர்த்தனாவை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கீர்த்தனா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது கணவர் வீரபத்திரன் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடப்பது கீர்த்தனாதான் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிம்கார்டை பிடுங்கியதால் மனம் உடைந்து கீர்த்தனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே திருமணமான 2 ஆண்டுகளில் கீர்த்தனா இறந்ததால் இதுகுறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.

    செல்போனில் பேசியதை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஈரோட்டில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு ரெயில் நிலையம் எந்த நேரமும் பயணிகள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.

    இங்கு காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தற்போது வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரோட்டோரம் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருவதால் வழக்கத்தை விட தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    குறிப்பாக காலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்று அணிவகுத்து செல்கின்றன. தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் வாகன நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    ரெயிலை பிடிக்க செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது
    • மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது.

    இங்குள்ள ஒரு உயர் மின் அழுத்த லைனில் உள்ள மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

    அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் சூழ்நிலையில் உள்ளது.

    மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
    • ‘குறை கேட்பு நாள் மனு’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள் இருப்பின், பொதுமக்களிடம் இருந்து அவற்றை கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

    பொதுமக்கள், அஞ்சல் துறை குறித்த தங்கள் குறைகளை தபால் மூலம் வரும் 19-ந் தேதிக்குள் கிடைக்கும்படி 'அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரிக்கு, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    தவிர 19 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோரிக்கை மனுவை நேரிலும் சமர்பிக்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.

    ×