search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Day Meeting"

    • ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
    • ‘குறை கேட்பு நாள் மனு’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள் இருப்பின், பொதுமக்களிடம் இருந்து அவற்றை கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

    பொதுமக்கள், அஞ்சல் துறை குறித்த தங்கள் குறைகளை தபால் மூலம் வரும் 19-ந் தேதிக்குள் கிடைக்கும்படி 'அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரிக்கு, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    தவிர 19 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோரிக்கை மனுவை நேரிலும் சமர்பிக்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.

    • வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
    • இதில் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.

    அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.

    இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ×