என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெ யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்த தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. மாலை திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்து முதலில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    அதன் பிறகு நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேர ம் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளின் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழ்நிலையில் மழை பெய்த தால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மொடக் குறிச்சியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதுபோல் எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி, கொடுமுடி, குண்டேரி பள்ளம், தாளவாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-46, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-41.20, ஈரோடு-20, கொடுமுடி-14.20, குண்டேரிபள்ளம்-10, தாளவாடி-8, பவானி-6.40, சென்னிமலை-2.

    • சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் அணிவிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஆவணி அவிட்டம் விழா வினை முன்னிட்டு சென்னி மலை முருகப் பெருமானுக்கு பூணூல் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி பவுர்ணமியினை முன்னிட்டு ஆவணி அவிட்ட விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர், உட்பட சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபிேஷக பூஜைகளும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் அனைவரும் காலை 11 மணி அளவில் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணிவித்தனர்.

    • மொடக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை சேர்த்து ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 123-க்கு விற்பனையாகின.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 23 ஆயிரத்து 828 எண்ணிக்கையிலான 9 ஆயி ரத்து 479 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனை க்கு கொண்டுவந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.00, அதிகபட்ச விலையாக ரூ.23.91 காசுகள், சராசரி விலையாக ரூ.23.19 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 348-க்கு விற்பனையாகின.

    இதனையடுத்து நடந்த கொப்பரைக்கான விற்பனையில் 181 மூட்டைகள் கொண்ட 5 ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட கொப்பரை விற்பனை யானது.

    விற்பனையான கொப்பரையில் முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.72.60 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.98 காசுகள், சராசரி விலையாக ரூ.77.45 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர கொப்பரை குறைந்தபட்ச விலையாக ரூ.56.25 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.29 காசுகள், சராசரி விலையாக ரூ.65.60 காசுகள் என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 775-க்கு விற்பனையானது.

    மொத்தம் தேங்காய் மற்றும் கொப்பரை சேர்த்து ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 123-க்கு விற்பனையாகின. 

    • மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவத்தன்று திடீரென புஷ்பா மாயமானார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள காதகிணறு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி புஷ்பா (47). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் ஏற்கனவே வலிப்பு நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென புஷ்பா மாயமானார். புஷ்பா மாயமானதை அடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் பட்டாசுப்பாளி அருகே உள்ள எல்.பி.பி வாய்க்காலில் புஷ்பாவின் உடல் கரை ஒதுங்கி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் புஷ்பாவின் உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.18 அடியாக சரிந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ள ப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணி கள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.18 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1,519 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாச னத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொட ர்ந்து திற ந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இதேபோல் மாவட்ட த்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 அடியாக உள்ளது.

    பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.94 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.

    • திட க்கழிவு மேலாண்மை திட்ட த்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    ஈரோடு:

    உள்ளாட்சி அமைப்பு களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிரு ப்பு பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரித்தல் மற்றும் மக்காத குப்பைகளை சிமெண்ட் தயாரிக்கவும், சாலைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் சேரமாகும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் கிராம ஊராட்சி களில் உள்ள குடியிருப்பு களில் சேகரமாகும் குப்பை கள் பெரும்பாலும் சாலை யோரங்களில் கொட்டி தீ வைக்கப் படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் இருந்து வருகின்றது.

    நகர்புற உள்ளாட்சிகளை போல மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்து குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிராம ஊராட்சி களில் இ ல்லாததால் மக்காத குப்பை களை தீ வைத்து எரிக்கப்ப டுவதாக கூறப்படுகின்றது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சி களிலும் மேம்படுத்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தர விட்டுள்ளார்.

    இது குறித்து ஊராட்சிகளி ன் உதவி இயக்குநர் சூர்யா கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உரக்கிடங்கிலும், மக்காத குப்பைகள் அந்தந்த ஊரா ட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிடங்கு களிலும் சேகரிக்கப்ப ட்டு பின்னர் சிமெண்ட் தயாரிப்பு நிறுவன ங்களுக்கு அனுப்பபடுகி ன்றது.

    ஒரு சில பகுதிகளில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது. எனவே கிராம ஊராட்சிகளில் திட க்கழிவு மேலாண்மை திட்ட த்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதம்மாள் காலனி, நாகர் பாளையம் ரோட்டை சேர்ந்த வர் செந்தில் (43). இவரது மனைவி தன லட்சுமி. இவ ர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில் ரிக் வண்டி டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    செந்திலுக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. தின மும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடை யே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அவரது மனைவியும், மகனும் செந்தி லிடம் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் செந்தில் குடித்துவிட்டு வீட்டு க்கு வந்துள்ளார். மாலை குடிபோதையில் மகனை டியூசனுக்கு அழை த்து செல்வதாக கூறினார். அதற்கு அவரது மனைவி வேண்டாம் நானே அழைத்து செல்கிறேன் என்று கூறி னார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அவரது மகன் தானாகவே டியூஷன் சென்று விட்டார். பின்னர் இரவு அவரது மனைவி டியூசனில் இருந்து மகனை அழைத்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒரு அறை யில் செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் வித்யகுமார் (44). இவரது மனைவி ஜெப நாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வித்ய குமார் மது பழக்கத்துக்கு அடிமையாகி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் கடந்த 6 வருட மாக அவரது மனைவியும், மகள்கள் 2 பேரும் வித்யகுமாரிடம் கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று வாசித்து வந்தனர். வித்யகுமார் தினமும் அவரது அம்மா வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சென்று வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வித்யகுமாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் மருத்து வமனையில் சிகிச்சை செய்தபோது டாக்டர் இனி மது அருந்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அதை காதில் வா ங்கி கொள்ளாமல் மீண்டும் பழையபடி வித்யகுமார் மது அருந்த தொடங்கினார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வித்யகுமார் மட்டு ம் வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே சென்று விட்டனர். பின்னர் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் வித்யகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்த வர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வித்யகுமார் இறந்து விட்டதாக தெரிவி த்தார். இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிவக்குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதுரை சேர்ந்தவர் ராஜன் மகன் சிவகுமார் (வயது 50). இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்த சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் அய்யாசாமி சூர்யா திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் பகுதியில் கஞ்சா விற்ப னை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கணேசன் (வயது 41) என்ப வரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதி ப்புள்ள 6.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஜெய சக்தி மேடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் கருப்பையா (38) என்பவரை சக்தி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் கைது செய்தார்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கருப்பையா மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும்.

    பவானி:

    பவானி வர்ணபுரம் முதல் வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமை வகித்தார். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் இடை யே போலீசார் பேசுகையில்,

    சிலை ஒன்பது அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்ப டும். சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாது கா ப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, வெள்ளித்திருப்பூர் போன்ற பகுதி சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சடையம் பாளையம் பிரிவு, முத்தம்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த முத்து மகன் சரத்குமார் (வயது 27), ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த அழகு துரை மகன் பிரசாந்த் (30) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,300 மதிப்புள்ள ஹான்ஸ், கூலி போன்ற போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ஷீட்களை உருவாக்க 2-க்கு 17 பருத்தி முறுக்கு நூலை கொண்டு 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் நெசவு செய்துள்ளார்.
    • வடிவமைத்து நெசவு செய்து உருவாக்கிய பெட்ஷீட்டினை அப்புசாமி இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தினை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவிற்கு பரிசளிக்க உள்ளதாக கூறினார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை 'சென்டெக்ஸ்' கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஜக்காடு துணி மற்றும் பெட்ஷீட் வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி.

    இவர் தனது ஓய்வு நேரங்களில் தலைவர்களின் உருவங்களை கைத்தறி பெட்ஷீட்களில் வடிவமைத்து சாதனை புரிந்து வருகிறார்.

    அப்புசாமி இதற்கு முன் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின், தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லோகோ என அந்த அந்த காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை பருத்தி பெட்ஷீட்டில் ஜக்காடு கைத்தறி நெசவின் மூலம் நெசவு செய்து சாதனை படைத்து வருகிறார்.

    அந்த வகையில் தற்போது இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதலை தெரிவிக்கும் விதமாக சந்திரயான்-3 ராக்கெட் மற்றும் நிலவு படங்களை பெட்ஷீட்டில் உருவாக்கியுள்ளார்.

    இந்த பெட்ஷீட்களை உருவாக்க 2-க்கு 17 பருத்தி முறுக்கு நூலை கொண்டு 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் நெசவு செய்துள்ளார். இதனை சந்திரயான் கவுண்டன் தொடங்கிய காலத்தில் இருந்து யோசித்து அதை வெற்றிகரமாக நிலையில் நிறுத்தப்பட்ட பின் வடிவமைத்து தறியில் நெசவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

    இதை வடிவமைக்க ஒரு வார காலம் ஆகி உள்ளது. இதை அவரது ஓய்வு நேரத்தில் வடிவமைத்து நெசவு செய்துள்ளார். இந்த பெட்ஷீட்டின் அளவு "60-க்கு 90"ஆகும். வடிவமைத்து நெசவு செய்து உருவாக்கிய பெட்ஷீட்டினை அப்புசாமி இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தினை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவிற்கு பரிசளிக்க உள்ளதாக கூறினார்.

    ×