கஞ்சா-மது விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்வன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா-மது விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அந்தியூர்-பவானி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

அப்ேபாது அங்கு போதை பொருளான கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பூவண்ணன் மகன் செல்வன் (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் விஜயமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவ ட்டம் அரக்கோட்டை பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் செல்லத்துரை என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com