என் மலர்
நீங்கள் தேடியது "கசிவு நீர்: சரி செய்யும் பணி தீவிரம்"
- பழைய கட்டுமானத்தில் ஏற்பட்ட கசிவு நீரால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
- தடுக்கும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து காளி குளம் 11-வது மைல்கல் அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதன் இடது கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக கசிவு நீர் வெளி யேறி கொண்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கீழ்பவானியில் வாய்க்காலில் கரைகளின் 2 பக்கமும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 20-ந் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 3 இடங்களில் கசிவு நீர் வெளியேறி வருகிறது. இதை யடுத்து மணல் மூட்டைகள் கொண்டும், ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் கொட்டி கரை பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காளி குளம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் 11 மைல் இடத்தில் பழைய கட்டுமானத்தில் ஏற்பட்ட கசிவு நீரால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
அதை தொடர்ந்து நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடி யாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரின் அளவை குறைத்தனர்.
அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வள துறை அதிகா ரிகள் உடனடியாக மணல் மூட்டைகள் கொண்டும் ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கசிவு நீர் வெளி யேறாமல் தடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து வாய்க்கா லில் கசிவு நீர் வெளியேறும் பகுதியில் இன்று மண் மூட்டைகள் அடுக்கி வைத்து கசிவு நீர் வெளியேறுவதை தடுக்கும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.






