என் மலர்
நீங்கள் தேடியது "lying on the roadside"
- மது பாட்டில்களை சிலர் சாலையோரம் வீசியும், உடைத்தும் செல்லுகின்றனர்.
- யானைகளுக்கு சாலையோரம் கிடக்கும் துண்டு பாட்டில்களால் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி இயற்கை எழில் நிறைந்த பகுதியாகும். இந்த வழியாக செல்லும் ரோட்டின் இரு புறமும் மரங்கள், செடிகள் வளர்ந்து பசுமை யாக காட்சியளிக்கும்.
இது ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி என்ப தால் இந்த வழித்தடத்தில் சாலையின் ஓரத்தில் வாகன ஓட்டிகள் வாகனத்திலிருந்து மது அருந்துகின்றனர். பின்னர் அந்த மது பாட்டில்களை சிலர் சாலையோரம் வீசியும், உடைத்தும் செல்லுகின்றனர்.
இதனால் அந்த வழியே நடந்து செல்லும் வனவி லங்குகள் பெரும் துன்பத்தி ற்கு ஆளாகின்றன. பண் ணாரி, திம்பம், ஆசனூர், காரப்பள்ளம், தாளவாடி, தலமலை, கேர்மாளம் செல் லும் வழியில் ஏராளமான யானைகள் தினமும் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரோட்டை கடந்து செல்கி ன்றனர்.
அவ்வாறு கடந்து செல்லும் யானைகளுக்கு சாலையோரம் கிடக்கும் துண்டு பாட்டி ல்களால் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மது அருந்துபவர்கள் வன விலங்குகளின் வாழ்விடத்தை பற்றி அக்கறை கொள்வதில்லை. யானைகள் இருந்தால் தான் காடுகள் வளம் பெறும். வனப்பகுதி செழிப்பாக இருந்தால் தான் மழைப்பொ ழிவும் அதிகமாகும். இதனால் வனப் பகுதி யில் சிதறி கிடக்கும் மது பாட்டில்க ளை அப்புறப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.






