லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Published on

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சித்தோடு நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ் (வயது 57), அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ஆனந்தன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com