என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகி ரியை அடுத்த வாழை த்தோட்டம் காரவலசையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 44). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி சித்ரா (42). இவர் சம்பவ த்தன்று காரவலசில் உள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்திற்கு கூலிவே லைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சித்ரா வேலை பார்த்து கொண்டிருக்கும் போது கரும்புத்தோட்டத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.

    இதனையடுத்து சித்ராவுடன் வேலை செய்துகொண்டிருந்த அவரது சகோதரி ராசாத்தி என்பவர் சித்ராவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழை த்து சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து சித்ராவின் கணவர் மாணிக்கம் சிவகிரி போலீ சாரிடம் புகார் அளித்து ள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடுமுடியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகின்றன.
    • இதில் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகின்றன.

    இதை முன்னிட்டு புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவிலில் வடிவுடைய நாயகி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகியோர் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களில் வெவ்வேறு திருக்கோல காட்சிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அந்த வகையில் நேற்று இரவு மகுடேஸ்வரர் கோவிலில் வடிவுடைநாயகி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், ஸ்ரீலட்சுமி கஜலட்சுமி திருக்கோலங்களிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதேபோல் கொடுமுடியை அடுத்த ஏமகண்டனூரில் உள்ள ஆட்சியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அம்மன் மகேஸ்வரி திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

    இதில் ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
    • லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி உள்ளது.

    இதனையொட்டி தியேட்டர்களுக்கு முன்பாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளம் இசைத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கின. முன்னதாக தியேட்டர்களுக்குள் ரசிகர்கள் அனைவரும் ஊழியர்களின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். சோதனையின் போது மதுபாட்டில்கள், பட்டாசு, கலர் பொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திரையரங்குகளுக்குள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தடை விதித்தனர். மேலும் ரசிகர்களை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் ஒரு தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில் விஜய்-யை வருங்கால முதல்வர் என்றும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வருங்கால அமைச்சர், வருங்கால எம்.எல்.ஏ, வருங்கால கவுன்சிலர் என பேனர் வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சத்தியமங்கலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வந்த அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. வந்த பிறகு விலை உயர்வு அதிகமாக உள்ளது, பால்விலை மட்டும் ஐந்து முறை விலை ஏற்றியுள்ளனர். மின் கட்டணம் மட்டும் 15 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. சிறுகுறு தொழிலாளிகளுக்கு 60 சதவிகிதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது, பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை ஒன்றை மட்டுமே தி.மு.க. அரசு மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது. 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும். இந்த ஆட்சியை எப்போது தமிழகத்தில் அகலும், இருள் எப்போது நீங்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

    ஏழை ஜாதி இருக்கக்கூடாது என நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் தமிழகத்தில் சனாதானம் இருக்கக் கூடாது இந்து தர்மம் இருக்கக் கூடாது என தி.மு.க.வினர் பேசி கொண்டுள்ளனர். ஊழல் தான் நம் மண்ணில் இருக்கக் கொண்டு கூடிய பெரிய பிரச்சனை. தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க. அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.

    தி.மு.க.வினர் சினிமா படம் தயாரிக்கின்றனர் அதை வெளியிடுகின்றனர். கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். இதனை மக்கள் வெறுக்கின்றனர். இந்த அரசியல் வேண்டாம், இதனை எதிர்த்து நிற்க துடிக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு கூட்டம் நமக்கு வருகிறது, நடக்கின்ற ஆட்சியை அடியோடு வேறறுக்க வேண்டும் என என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் வருகின்றனர்.

    தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது, ஒரு குழந்தை பிறக்கும்போதே கடனாளியாக பிறகின்றது , அதேபோல குஜராத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே 17 ஆயிரம் ரூபாய் லாபத்தில் பிறகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடாந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் புதுவிதமான அரசியலை மக்கள் பார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. மக்களுக்கு இந்த நடைமுறை அரசியல் சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி கடை கோடியில் உள்ளவர்கள் வரை சென்றுள்ளது, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த மாங்காய் மரம் சுவையாக உள்ளதோ அதில் தான் கல் எடுத்து அடிப்பார்கள் என்பதைப் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை குறிவைப்பது பேசுவது நல்லது தானே, கல்லடி பட்டு தான் மாங்கா மரம் சுவையான மாம்பழங்களை கொடுக்கின்றது. விமர்சனத்திற்கு எப்போதும் அண்ணாமலை அஞ்சுவது கிடையாது.

    அண்ணாமலைக்கு என்று தனிப்பணி அரசியல் உள்ளது. அந்த அரசியலில் நான் ஒரு பெட்டிக்குள் அடங்க விரும்பவில்லை. தமிழகத்தில் முன்பு இருந்த அரசியல்வாதிகள் இதுபோன்றுதான் அரசியல் செய்தார்கள் என்றால் அதனை அண்ணாமலை செய்ய விரும்பவில்லை. என்னுடைய அரசியல் ஒரு மாற்று அரசியல். தமிழகத்தில் நடந்து வரும் எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை, நானும் இந்த அரசியலை மாற்றிக்கொள்ளவில்லை,

    என்னுடைய கருத்துக்களை ஆக்ரோசமாகவும் உரக்க தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன், நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைத்தது கிடையாது.

    பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உறுதியாக வளர்ந்துள்ளது அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இன்னும் பாஜக வேகமாக வளர வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    அதிமுக கூட்டணி முறிவுக்கு பின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களோடு கூட்டணி என அவர் தெரிவித்தார்.

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுந்தப்பாடி, கொளத்துபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,

    தர்மாபுரி, கே.புதூர், மாரப்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாள்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம் பாளையம், குஞ்சரமடை,

    ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்கவலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர்,

    கவுண்டன்பாளையம் குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் போன்ற பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • கொடுமுடி வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    • மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் ஆர்வமுடன் தொிந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளா ண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கொடுமுடி வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் தெலுங்கானா மாநிம் நிஜம தாபாத் கண்டுனர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் விற்பனை கூடத்திற்கு சென்றனர். அங்கு ஸ்பைசஸ்போர்ட் துணை இயக்குநர் சுந்த ரேசன் மஞ்சள், மக்காச்சோளம், கம்பு, நெல் என அனைத்து பயிர்களும் இ-நாம் மூலம் விற்பனை செய்யப்படுவது, அதில் விவசாயிகள் பதிவு செய்யும் முறை, வியாபாரிகள் விலை நிர்ணயம், விற்பனை நடை முறைகள் குறித்து எடுத்து கூறினார்.

    பின்னர் மஞ்சள் குர்க்குமின் பிரித்தெடுத்தல் ஆய்வகத்திற்கு சென்றனர். அங்கு மஞ்சள் ரகங்கள், மஞ்சள் தரக்கட்டுப்பாட்டு முறைகள், மஞ்சள் ஈரப்பதம், குர்க்குமின் அளவு ஆகியவை குறித்து எடுத்து கூறப்பட்டது.

    கமரப்பள்ளி சுமார்ட் அக்ரோ புட் பார்க் மற்றும் மஞ்சள் ஆராச்சி நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட ரகங்களை பார்வையிட்டனர். மஞ்சள் ஆராச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் மகேந்தர் மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் குளிர்பதன கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு மஞ்சள், சோளம் போன்ற பல வகையான விவசாய பொருள்கள் பதப்படுத்தும் முறைகளை பார்வையிட்டனர்.

    இந்த கண்டுநர் சுற்றுலா மூலம் மஞ்சள் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் ஆர்வமுடன் தொிந்து கொண்டனர். இது மிகவும் பயனள்ளதாக இருந்தது என கூறினர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    ஈரோடு, அக். 18-

    நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.

    இந்த திரைப்படத்தை நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணி அளவில் முடி வடையும் வகையில் திரையி டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய திரைப்படம் வெளியிடும்போது தியேட்டர்களில் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் வசதிகளை உரிமையாளர்கள் செய்திருக்க வேண்டும்.

    தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் போது சுகா தார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தியே ட்டர்களில் ரசிகர்களின் வாகனங்கள் எளிதாக உள்ளே வந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் காட்சி அரங்குக்குள் சிரமமின்றி உள்ளே வந்து வெளியே செல்லும் வகையில் முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும். இருக்கைகள், தியேட்டர்களின் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    தியேட்டர்களை சுகாதா ரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடை முறைகளுடன் சிறப்பு காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அரசால் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக் கட்டணத்தையோ, வாகன நிறுத்த கட்டணத்தையோ வசூலிக்க கூடாது.

    இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
    • குழுவின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், மீனமிலம் போன்ற இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி அலகுகளை நிறுவ, உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் 3 அலகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

    சிறு, குறு பெண் விவசாயிகள்அடங்கிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல்விளக்க அலகாக பராமரிக்க அனுமதிக்க வேண்டும்.

    இது தொடர்பான உறுதிமொழி பத்திரம் பயனாளிகளிடம் பெற்று கொள்ளப்படும்.

    தேர்வு செய்யப்பட்டபின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெ றும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியை தொடர வேண்டும்.

    மானியம் பெறும் குழு திட்டக் கூறு களை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதா ரத்தை சமர்பிக்க வேண்டும்.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கை யினை வரும் 27-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு ஒரு நாட்டு மாடு, மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, இயற்கை இடுபொருள் தயாரிக்க தேவையான கலன்கள், மூலப்பொ ருட்கள், பேக்கேஜிங் மற்றும் லேபிலிங் செய்ய தேவையான எந்திரங்களை வாங்கு வதற்கான விலைப்பட்டியல் பெறப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக சம்பந்தபட்ட குழுவின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

    மேலும் தகவல்களுக்கு ஜெயசந்திரன், வேளாண்மை அலுவலரை (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), ஈரோடு தொலைப்பேசி 9842370603 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


    • நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 148-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 140 மூட்டைகளில் 4 ஆயிரத்து 266 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.68.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.46 காசுகள், சராசரி விலையாக ரூ.85.29 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 148-க்கு விற்பனையானது.

    • பட்டாசுகளை ரெயில்களில் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

    ஈரோடு, அக். 18-

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதையொ ட்டி, ரெயில்க ளில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு பண்டி கைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு மார்க்கமாக செல்லும் ரெயில்களில் பட்டாசுகள் விற்பனைக்காகவோ அல்லது சொந்த பயன்பாட்டி ற்காக பார்சல் மூலம் அனுப்பி வைக்கின்றனரா? என ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீ சாரும், ஈரோடு ரெயில்வே போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

    இது குறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கூறியதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசுகளை விற்பனை க்காக கொண்டு செல்கின்றனரா? என ஓடும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்களில் சோத னை அதிகரித்து ள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதியில் பட்டாசுகள் கொண்டு செல்கின்றனரா? பயணி களின் உடமைகளை சோதனை செய்த ரெயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதி ப்போம்.

    மேலும் ரெயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படு த்த உள்ளோம்.

    பயணிகள் பட்டாசுகளை ரெயில்களில் எடுத்து சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் ரெயில்வே தண்டவாளத்தில் கவன க்குறைவாக கடக்கும்போது ரெயில் மோதி இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவுக்கு காரித்ராத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.
    • படிக்கட்டில் நின்று பயணித்த ஸ்ரீஜீத் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் திருச்சூர், மஞ்சாடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (30). மருத்துவ விற்பனை பிரதிநிதி. இவர் அலுவலக வேலை காரணமாக சம்பவத்தன்று கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கு சென்றிருந்தார்.

    பின்னர் தனது நண்பர் களுடன் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு காரித்ராத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த ெரயில் ஈரோடு ெரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனங்கூர் ெரயில்வே யார்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ெரயில் படிக்கட்டில் நின்று பயணித்த ஸ்ரீஜீத் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து ஈரோடு ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ஸ்ரீஜித்துக்கு கிருஷ்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 3,122 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,122 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 1800 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.69 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியும் உள்ளது.

    ×